பக்கம் எண் :

486சத்திய சோதனை

Untitled Document
எளிய ஆனால், மிக்க உறுதியுடைய      இந்த விவசாயி என்னைப்
பிடித்துக்கொண்டு விட்டார்.

     ஆகவே, 1917-ஆம் ஆண்டு          ஆரம்பத்தில் நாங்கள்
கல்கத்தாவிலிருந்து சம்பாரணுக்குப் புறப்பட்டோம். நாங்கள் இருவரும்
நாட்டுப்புற ஆசாமிகளாகவே  தோற்றம் அளித்தோம். அங்கே போக
எந்த ரெயிலில் ஏறுவது என்பது கூட    எனக்குத் தெரியாது. அவர்
தான் என்னை வண்டிக்கு         அழைத்துப் போனார். இருவரும்
சேர்ந்தாற்போலப் பிரயாணம் செய்து    காலையில் பாட்னா போய்ச்
சேர்ந்தோம்.

     பாட்னாவுக்கு அப்பொழுதுதான்        முதல்முறையாக நான்
சென்றேன் அங்கே தங்கலாம் என்றால்,      எனக்கு நண்பர்களோ,
தெரிந்தவர்களோ யாரும் இல்லை. ராஜ்குமார்     சுக்லா சாதாரணக்
குடியானவரேயாயினும் பாட்னாவில்         அவருக்குக் கொஞ்சம்
செல்வாக்கு இருக்கக்கூடும்    என்று எண்ணினேன். பிரயாணத்தின்
போது அவரை இன்னும்          கொஞ்சம் அதிகமாகத் தெரிந்து
கொண்டேன். ஆனால், பாட்னா போய்ச் சேர்ந்ததும்  அவரைப்பற்றி
எனக்கு எந்தவிதமான மயக்கமும் இல்லாது போய்விட்டது.அவருக்கு
எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. தம் நண்பர்கள்   என்று அவர்
எண்ணியிருந்த வக்கீல்கள், அப்படி ஒன்றும்     அவர் நண்பர்கள்
அல்ல. ஏழை    ராஜ்குமார், அநேகமாக அவர்களுக்குக் குற்றேவல்
செய்பவராகவே இருந்தார்.            இத்தகைய விவசாயிகளான
குடியானவர்களுக்கும்     அவர்களுடைய வக்கீல்களுக்குமிடையே,
பிரவாக சமயத்தில் கங்கை இருப்பதைப் போன்று, அகலமான அகழ்
இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும்.

     ராஜ்குமார் சுக்லா, பாட்னாவில்     ராஜேந்திர பாபு வீட்டிற்கு
என்னை அழைத்துச் சென்றார். அச்சமயம்            ராஜேந்திர
பாபு பூரிக்கோ வேறு எங்கோ      போய்விட்டார். எங்கே என்பது
எனக்கு நினைவு இல்லை.              பங்களாவில் இரண்டொரு
வேலைக்காரர்களே இருந்தார்கள். அவர்கள்   எங்களைத் திரும்பிப்
பார்க்கவே இல்லை. சாப்பிட என் வசம்        கொஞ்சம் ஆகாரம்
இருந்தது. பேரீச்சம் பழம் வேண்டும் என்றேன்.   அவர் கடைக்குப்
போய் அதை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

     தீண்டாமை, பீகாரில் மிகக் கடுமையாக     அனுசரிக்கப்பட்டு
வந்தது. கிணற்றிலிருந்து      வேலைக்காரர்கள் தண்ணீர் எடுத்துக்
கொண்டிருக்கும்போது நான்    தண்ணீர் எடுக்கக்கூடாது என்றனர்.
அப்படி எடுத்தால் என் வாளியிலிருந்து        நீர்த் துளிகள் சிதறி,
தாங்கள் தீட்டாகிவிடுவார்கள் என்றனர். ஏனெனில்,    நான் இன்ன
சாதியைச் சேர்ந்தவன் என்பது          அவர்களுக்குத் தெரியாது
வீட்டிற்குள்ளிருந்த கக்கூசுக்குப்       போகும்படி குமார் எனக்குக்
காட்டினார். ஆனால், வேலைக்காரர்களோ, வெளியிலிருந்த