பக்கம் எண் :

சாதுவான பீகாரி 487

Untitled Document
கக்கூசுக்குப் போகும்படி கூறிவிட்டனர். இத்தகைய    அனுபவங்கள்
எனக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டதால்,     இவைகளைக் கண்டு
நான் ஆச்சரியப்படவுமில்லை,      கோபமடையவுமில்லை. தாங்கள்
என்ன செய்ய வேண்டும் என்று   ராஜேந்திரப் பிரசாத் விரும்புவார்
என்று அவ்வேலைக்காரர்கள் எண்ணினார்களோ, அந்தக் கடமையை
அவர்கள் செய்தனர்.

     அந்தச் சுவாரஸ்யமான        அனுபவங்களினால் ராஜ்குமார்
சுக்லாவைக் குறித்துச் சரியாக நான்     தெரிந்துகொள்ள முடிந்தது.
அதே சமயத்தில் அவர்மீது எனக்கிருந்த    மதிப்பும் அதிகமாயிற்று.
ராஜ்குமாரினால் எனக்கு வழிகாட்ட முடியாது;      லகானை நானே
கையில் பிடித்துக்கொள்ள   வேண்டியதுதான் என்பதை இப்பொழுது
கண்டுகொண்டேன்.

13 சாதுவான பீகாரி

     மௌலானா மஜ்ருல் ஹக் லண்டனில்   வக்கீல் தொழிலுக்குப்
படித்துக்கொண்டிருந்தபோது அவரை     எனக்குத் தெரியும். பிறகு
1915-இல் காங்கிரஸில் அவரைச் சந்தித்தேன். அந்த ஆண்டு அவர்
முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார்.       அப்பொழுது மீண்டும்
பழக்கம் ஏற்பட்டபோது,       நான் பாட்னாவுக்கு எப்பொழுதாவது
வந்தால் தம்முடன் தங்குமாறு அவர் அழைத்திருந்தார்.  இப்பொழுது
அது எனக்கு ஞாபகம் வந்தது.     நான் வந்திருக்கும் நோக்கத்தை
அறிவித்து அவருக்கு ஒரு சீட்டு     அனுப்பினேன். உடனே அவர்
தமது மோட்டாரில் வந்து, தம்முடன் வந்து தங்குமாறு வற்புறுத்தினார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு     நான் போக வேண்டிய இடத்திற்குப்
புறப்படும் முதல் வண்டியிலேயே என்னை   அனுப்பும்படி அவரைக்
கேட்டுக் கொண்டேன். அவ்விடத்திற்கு  என்னைப் போன்று முற்றும்
புதிதான ஒருவரால் ரெயில்வே வழி    காட்டியைக்கொண்டு எதுவும்
தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே,   ராஜ்குமார் சுக்லாவுடன்
பேசினார். நான் முஜாபர்பூருக்கு     முதலில் போக வேண்டுமென்று
யோசனை கூறினார். அங்கே போக     அன்று மாலையிலேயே ஒரு
வண்டி இருந்தது. அதில் அவர் என்னை ஏற்றி அனுப்பினார்.

     பிரின்ஸிபால் கிருபளானி அப்பொழுது முஜாபர்பூரில் இருந்தார்.
ஹைதராபாத்திற்கு (சிந்து) நான் போயிருந்த போதிலிருந்து  அவரை
நான் அறிவேன். அவருடைய     பெரும் தியாகங்களைக் குறித்தும்
எளிய வாழ்க்கையைப் பற்றியும், பேராசிரியர் கிருபளானி   அளித்து
வரும் நிதியைக்கொண்டு தாம்        ஆசிரமம் நடத்தி வருவதைப்
பற்றியும் டாக்டர் சோயித்ராம் என்னிடம் கூறியிருந்தார். கிருபளானி,
முஜாபர்பூர் அரசாங்கக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.  நான்
அங்கே போவதற்குக்