பக்கம் எண் :

முடிவாக லண்டனில்49

Untitled Document
முடியாது என்று சொல்லிவிட்டார்.       பிறகு நான் குடும்ப நண்பர்
ஒருவரை நாடினேன். கப்பல்           கட்டணத்துக்கும் சில்லரைச்
செலவுக்கும் வேண்டிய           அளவுக்கு எனக்குப் பண உதவி
செய்யுமாறும், அக்கடனை என்        சகோதரரிடமிருந்து வாங்கிக்
கொள்ளும்படியும்        கேட்டுக்கொண்டேன்.  இந்த நண்பர் என்
கோரிக்கைக்கு   ஒப்புக் கொண்டதோடு என்னை உற்சாகப்படுத்தியும்
அனுப்பினார்.      அவரிடம் மிக்க நன்றியுடையவனானேன். அந்தப்
பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு உடனே       கப்பல் டிக்கெட்
வாங்கினேன். பின்பு பிரயாணத்திற்கு எனக்கு  வேண்டியவைகளைத்
தயாரிக்கலானேன்.    இவ்விஷயத்தில் அனுபவம் வாய்ந்த மற்றொரு
நண்பர்   இருந்தார்.     உடைகளையும்,  மற்றவைகளையும் அவர்
தயாரித்துக்            கொடுத்தார்.   உடைகளில் சில  எனக்குப்
பிடித்தமாயிருந்தன; சில எனக்குக்      கொஞ்சமும் பிடிக்கவில்லை.
கழுத்தில் ‘டை’ கட்டிக்கொள்ளுவதில் பின்னால் நான் பெருமகிழ்ச்சி
அடைந்ததுண்டு.       ஆனால்,   அப்பொழுது     அது எனக்கு
வெறுப்பாயிருந்தது. குட்டைச் சட்டை  அணிவது,      வெட்கத்தை
விட்டுச் செய்யும் காரியம் என்று கருதினேன்.     இங்கிலாந்துக்குப்
போகவேண்டும்       என்ற  ஆர்வமே    என்னிடம் மேலோங்கி
நின்றதால்,   அதன்  எதிரே        இந்த       வெறுப்பெல்லாம்
மேலோங்கவில்லை.  கப்பலில் ஜூனாகத் வக்கீல் ஸ்ரீ திரியம்பக்ராய்
மஜ்முதார்    செல்ல   இருந்த அதே   அறையிலேயே நண்பர்கள்
எனக்கும் ஏற்பாடு        செய்திருந்தனர்.  என்னைக் கவனித்துக்
கொள்ளுமாறும் அவரிடம் கூறினர். அவர் அனுபவமுள்ளவர்; நல்ல
வயது வந்தவர் ;  உலகமறிந்தவர். நானோ,      உலக அனுபவமே
இல்லாத பதினெட்டு வயதுச் சிறுவன். என்னைப்பற்றிக் கவலைப்பட
வேண்டியதில்லை என்று ஸ்ரீ மஜ்முதார்      என் நண்பர்களுக்குக்
கூறினார்.

     கடைசியாகச் செப்டம்பர், 4-ஆம் தேதி பம்பாயிலிருந்து நான்
கப்பலில் புறப்பட்டேன்.

13. முடிவாக லண்டனில்

     கப்பல் பிரயாணத்தில்  எனக்கு     மயக்கம் எதுவும் வரவே
இல்லை. ஆனால், நாளாக  ஆக எனக்கு அலுப்புத்தான்  அதிகமாக
இருந்தது. பிரயாணிகளின்  சாப்பாட்டு        வசதிக்காரியஸ்தரிடம்
பேசக்கூட எனக்குக்   கூச்சமாக  இருந்தது.   ஆங்கிலத்தில் பேசி
எனக்குப்      பழக்கமே  இல்லை.    நாங்கள் இருந்த இரண்டாம்
வகுப்பில்      ஸ்ரீ மஜ்முதாரைத்   தவிர        மற்றெல்லோரும்
ஆங்கிலேயர்கள்.    அவர்களுடன்  என்னால் பேச முடியவில்லை.
அவர்கள் என்னிடம் வந்து ஏதேனும்    பேசினால்,     அவர்கள்
சொல்லுவது என்ன என்பதைப்    புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக
இருந்தது. புரிந்து கொண்டாலும்