பக்கம் எண் :

48சத்திய சோதனை

Untitled Document

செய்வதற்கில்லை. இங்கிலாந்துக்குச்       செல்வதென்று தீர்மானித்து
விட்டதை நான் மாற்றுவதற்கில்லை. என்       தந்தையின் நண்பரும்
ஆலோசகருமான கற்றறிந்த        ஒரு பிராமணர், நான் இங்கிலாந்து
செல்வதில் எந்தவித                   ஆட்சேபமும் இருப்பதாகச்
சொல்லவில்லை. என் தாயாரும்,       சகோதரரும் எனக்கு அனுமதி
கொடுத்திருக்கிறார்கள்” என்றேன்.

     “என்றாலும், சாதிக்கூட்டத்தின்    கட்டளையை நீ மீறி நடக்கப்
போகிறாயா?”

     “எனக்கு வேறு வழியில்லை.  இவ்விஷயத்தில் சாதி தலையிடக்
கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”

     இதைக் கேட்டதும்      சேத்துக்குக்    கோபம் வந்துவிட்டது.
கடுமையாகப்         பேசினார். அதற்கெல்லாம்       அசையாமல்
உட்கார்ந்திருந்தேன். எனவே, சேத் வருமாறு   உத்தரவு பிறப்பித்தார்:
“இன்று முதல் இப்பையனை    சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக
நடத்த வேண்டும்.     இவனுக்கு   யார் உதவி செய்தாலும், இவனை
வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச்   சென்றாலும், அவர் ஒரு ரூபாய்
நான்கணா அபராதம் விதிக்கப் படுவார்!”

     இந்த உத்தரவைக் கேட்டு நான் கலங்கிவிடவில்லை. சேத்திடம்
விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதை என் சகோதரர் எப்படி
ஏற்பாரோ என்றே    பயந்திருந்தேன்.     அதிர்ஷ்டவசமாக, அவர்
உறுதியுடன்    இருந்தார்.  சேத்தின் கட்டளை எதுவானாலும்,  நான்
போவதைத்    தாம்      அனுமதிப்பதாகக்  கடிதம் எழுதி எனக்கு
உறுதி கூறினார்.

     என்றாலும், கப்பல் ஏறிவிடவேண்டும் என்ற  என் ஆர்வத்தை
இச்சம்பவம்           அதிகமாக்கி விட்டது.   என் சகோதரரைக்
கட்டாயப்படுத்தி அவர் மனத்தை        மாற்றிவிடுவதில் அவர்கள்
வெற்றிபெற்று விட்டால் என்னவாகும்? எதிர்பாராதது ஏதோ நிகழ்ந்து
விடுகிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது? எனக்குள்ள
சங்கடத்தைக் குறித்து        இப்படியெல்லாம்   எண்ணி    நான்
சஞ்சலப்பட்டுக்        கொண்டிருந்தபோது, பாரிஸ்டர் ஆவதற்காக
ஜூனாகத் வக்கீல்  ஒருவர்,    செப்டம்பர், 4-ஆம் தேதி புறப்படும்
கப்பலில் இங்கிலாந்துக்குப்       போகிறார் என்று கேள்வியுற்றேன்.
என்னைக்            கவனித்துக் கொள்ளுமாறு   என் சகோதரர்
சொல்லிப் போயிருந்த      நண்பர்களைச் சந்தித்து,  விஷயத்தைக்
கூறினேன்.     அத்தகைய      துணையுடன் போவதற்கு வாய்த்த
சந்தர்ப்பத்தை இழந்து விடக்கூடாது என்று     அவர்களும் ஒப்புக்
கொண்டார்கள்.                 காலம் தாழ்த்துவதற்கே இல்லை.
அனுமதியளிக்குமாறு என்      சகோதரருக்குத் தந்தி கொடுத்தேன்.
அவரும் அனுமதித்தார். பணத்தைக்           கொடுக்கும்படி என்
மைத்துனனைக்    கேட்டேன்.   ஆனால்,     அவரோ, சேத்தின்
உத்தரவைக் குறிப்பிட்டு, தாம் சாதிப் பிரஷ்டன் ஆக