பக்கம் எண் :

சாதிக் கட்டுப்பாடு47

Untitled Document
வேலைகளைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார்.  என்
பிரயாணச்       செலவுக்கென்று      வைத்திருந்த பணத்தை ஒரு
மைத்துனரிடம்  கொடுத்து,வைத்திருக்கச்  சொல்லிவிட்டு,   எனக்குத்
தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு,   சில நண்பர்களிடம்
சொல்லிப் போனார்.

     பம்பாயில் நாளை      எண்ணிக்கொண்டே காலம் கழித்தேன்.
இங்கிலாந்துக்குப்    போகப்போவதைப் பற்றி ஓயாமல் கனவு கண்டு
கொண்டிருந்தேன்.

     இதற்கு மத்தியில் நான் வெளிநாட்டுக்குப்  போகப் போவதைக்
குறித்து என் சாதியினர்       பரபரப்படைந்தார்கள். மோத் வணிக
சாதியைச் சேர்ந்த யாரும் இதுவரை இங்கிலாந்துக்குப் போனதில்லை;
நான் போகத் துணிந்தால், எனக்குத் தக்க சிட்சை விதிக்க வேண்டும்!
சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டினர்.  அதன் முன்னால்
ஆஜராகுமாறு எனக்குக் கட்டளை அனுப்பினர்.   நானும் போனேன்.
திடீரென்று எனக்கு எப்படி அவ்வளவு தைரியம்    வந்தது என்பது
எனக்கே தெரியவில்லை.  எதற்கும்     அஞ்சாமல்,   கொஞ்சமும்
தயக்கமின்றிக்        கூட்டத்திற்கு    முன்னால் போனேன். சாதி
நாட்டாண்மைக்காரரான         சேத்  எனக்குத் தூர பந்து.  என்
தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராயிருந்தார்.  என்னைப் பார்த்து
அவர் பின்வருமாறு கூறினார்:

     “இங்கிலாந்துக்குப்   போவதென்று நீ  ஏற்பாடு செய்திருப்பது
சரியல்ல          என்பது   நம்   சாதியினரின்   அபிப்பிராயம்.
வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம்        செய்வதை நம் மதம்
அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களைக்    கைவிடாமல் அங்கே
வசிப்பதே    சாத்தியமில்லை           என்று நாங்கள் கேள்விப்
பட்டிருக்கிறோம். ஐரோப்பியருடன் சேர்ந்து சாப்பிடவும்  குடிக்கவும்
வேண்டிவரும்!”

     இதற்கு நான் சொன்ன பதிலாவது :       “இங்கிலாந்துக்குச்
செல்வது நம் மதத்திற்கு    விரோதம் என்று   நான் கருதவில்லை.
மேற்கொண்டு         படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக
உத்தேசித்திருக்கிறேன்.    நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப்
பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என்
தாயார் முன்னிலையில்     சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
அந்தப் பிரதிக்ஞை          என்னைப் பாதுகாக்கும் என்று நான்
நிச்சயமாயிருக்கிறேன்.”

     இதற்குச்     சேத்,   “ அங்கே நமது    மதாசாரங்களைக்
கடைப்பிடித்து நடப்பது      சாத்தியமே அல்ல   என்று நாங்கள்
சொல்லுகிறோம். எனக்கும்       உன் தந்தைக்கும் இருந்த உறவு,
உனக்குத் தெரியும். ஆகவே, நான் கூறும் புத்திமதியை நீ  கேட்க
வேண்டும்” என்றார்.

     “அந்த      உறவுகளையெல்லாம் நான் அறிவேன். நீங்கள்
எனக்குப் பிதாவைப் போன்றவர்.     ஆனால் இதில் நான் வேறு
எதுவும்