பக்கம் எண் :

வேலைமுறைகள்499

Untitled Document
கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே      அதற்கு உதவி செய்ய
முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில்     எந்தத் துறையில்
தொண்டு செய்தாலும், முடிவில்    அது நாட்டிற்கு ராஜீய வகையில்
உதவி செய்வதாகவே ஆகும்.       இந்த உண்மைக்குச் சம்பாரண்
போராட்டம் ஒரு ருசுவாகும்.

16 வேலைமுறைகள்

     சம்பாரண்        விசாரணையின்       முழு விவரத்தையும்
கூறுவதென்றால், சம்பாரண் விவசாயிகள்      அச்சமயத்தில் இருந்த
நிலைமையைப்        பற்றிக் கூறுவதாகவே அது ஆகும். ஆனால்
இந்த அத்தியாயங்களுக்கு அது    பொருத்தம் இல்லாதது. சம்பாரண்
விசாரணை, சத்தியம், அகிம்சை ஆகியவற்றில்     ஒரு தைரியமான
சோதனையேயாகும். அந்த   நோக்கத்துடன் பார்க்கும்போது, எழுதத்
தக்கவை என்று எனக்குத்    தோன்றுகிறவைகளை மாத்திரமே நான்
வாரந்தோறும் எழுதிக்கொண்டு வருகிறேன். இந்த   விசாரணையைக்
குறித்து மேலும் விவரமாக அறிய விரும்புவோர்,     ஹிந்தியில் ஸ்ரீ
ராஜேந்திரப் பிரசாத் எழுதியிருக்கும்    ‘சம்பாரண் சத்தியாக்கிரகம்’
என்ற  நூலைப் பார்க்கவும். அதன் ஆங்கிலப் பதிப்பும் இப்பொழுது
அச்சாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிகிறேன்.

     இந்த அத்தியாயத்திற்கு           உரிய விஷயத்தை இனிக்
கவனிப்போம். கோரக் பாபு தம்       வீட்டைக் காலிசெய்துவிட்டு,
வேறிடத்திற்குச் செல்லும்படி செய்யாமல்  அவர் வீட்டிலேயே இந்த
விசாரணையை நடத்தி வருவது          என்பது இயலாத காரியம்.
எங்களுக்குத் தங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுக்கும் அளவுக்கு
மோதிகாரி மக்களுக்கு இன்னும் பயம் போய்விடவில்லை. என்றாலும்,
பிரஜ்கிஷோர் பாபு சாமர்த்தியமாக   ஒரு வீட்டைப் பிடித்துவிட்டார்.
அதைச் சுற்றித் திறந்த இடம் நிறைய உண்டு. அவ்வீட்டிற்கு நாங்கள்
மாறினோம்.

     பணம் இல்லாமல் வேலையை      நடத்திக்கொண்டு போவது
என்பதும் சாத்தியமாக இல்லை. இது     போன்ற வேலைக்குப் பண
உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்     வெளியிடும்
வழக்கமும் இதுவரை இல்லை. பிரஜ்கிஷோரும்  அவர் நண்பர்களும்
முக்கியமான வக்கீல்கள். அவர்களே   பணம் கொடுத்து வந்தார்கள்.
சமயம் நேர்ந்த பொழுதெல்லாம்       நண்பர்களிடமிருந்தும் பெற்று
வந்தனர். பணம் கொடுக்கக் கூடிய வசதியில் தாங்களும்,  தங்களைப்
போன்றவர்களுமே         இருக்கும்போது பண உதவி செய்யுமாறு
பொதுமக்களை அவர்கள் எப்படிக்கேட்க முடியும்?   அதுவே வாதம்
என்று தோன்றியது. சம்பாரண் விவசாயிகளிடமிருந்து   எந்தவிதமான
பண உதவியையும்          ஏற்றுக்கொள்ளுவதில்லை என்று முடிவு
செய்துகொண்டுவிட்டேன். ஏனெனில், தவறான