பக்கம் எண் :

500சத்திய சோதனை

Untitled Document
அபிப்பிராயம் ஏற்படுவதற்கு அது    நிச்சயம் இடம் கொடுத்துவிடும்.
இந்த விசாரணையை நடத்துவதற்காக என்று     பண உதவி கோரிப்
பொதுவாகத் தேச   மக்களுக்கு வேண்டுகோள்  வெளியிடுவதில்லை
என்றும் உறுதி செய்துகொண்டேன். ஏனெனில்,      அவ்விதம் தேச
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தால்,          இது அகில இந்திய
விஷயமாகவும்,            ராஜீய விஷயமாகவும் ஆகி விடக்கூடும்.
பம்பாயிலிருந்து நண்பர்கள்       ரூ. 15,000 கொடுப்பதாகக் கூறினர்.
ஆனால், அவர்களுக்கு வந்தனம் கூறி,       அதை ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டேன்.      பிரஜ்கிஷோர் பாபுவின் உதவியைக் கொண்டு
சம்பாரணுக்கு வெளியிலிருக்கும்     பணக்காரர்களான பீகாரிகளிடம்
இருந்து    எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசூலித்துக்கொள்ளுவது,
மேற்கொண்டும் தேவைப்பட்டால் ரங்கூனிலிருந்த என் நண்பர் டாக்டர்
பி. ஜே. மேத்தாவிடம் கேட்பது என்று   முடிவு செய்து கொண்டேன்.
எவ்வளவு தேவைப்பட்டாலும் அனுப்புவதாக டாக்டர் மேத்தா உடனே
ஒப்புக்கொண்டார். இவ்விதம்         பணத்தைப் பற்றிய கவலையே
எங்களுக்கு   இல்லாது போயிற்று. சம்பாரணில் வறுமை நிலைமைக்கு
ஏற்ற வகையில் மிகவும்      சிக்கனமாகவே செலவு செய்வது என்று
நாங்கள் உறுதி கொண்டதால்,         பெருந்தொகை  எங்களுக்குத்
தேவைப்படுவதற்கும் இல்லை.          உண்மையில், பெருந்தொகை
எங்களுக்குத் தேவைப்படவில்லை என்பதையே முடிவிலும் கண்டோம்.
மொத்தத்தில் மூவாயிரம்           ரூபாய்க்கு மேல் நாங்கள் செலவு
செய்யவில்லை என்றே எனக்கு ஞாபகம். நாங்கள் வசூலித்ததில்  சில
நூறு ரூபாய்களை மீதப்படுத்தியும் விட்டோம்.

     ஆரம்ப நாட்களில் என்னுடைய       சகாக்கள் விசித்திரமான
வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.      இதைக் குறித்து நான்
இடைவிடாமல் அவர்களைப் பரிகாசம்       செய்து வந்தேன். அந்த
வக்கீல்கள் ஒவ்வொருவருக்கும்           ஒரு வேலைக்காரன், ஒரு
சமையற்காரன் ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சமையல்,
இரவில்        நடுநிசியில் கூடச் சாப்பிடுவார்கள். அவர்கள் தங்கள்
செலவுக்குத் தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட போதிலும், கால நேர
ஒழுங்கின்றி அவர்கள்        நடந்துகொண்டு வந்தது எனக்கு ஒரே
கவலையாக இருந்தது. நாங்கள் மிகவும்       நெருங்கிய நண்பர்கள்
ஆகிவிட்டதால், எங்களுக்குள்           தவறான அபிப்பிராயங்கள்
ஏற்பட்டுவிடும் என்பதற்கில்லை. நான்     பரிகாசம் செய்ததை நல்ல
உணர்ச்சியுடனேயே அவர்கள்      ஏற்றுக் கொண்டார்கள். முடிவில்,
வேலைக்காரர்களையெல்லாம்           அனுப்பி விடுவது, எல்லாச்
சமையல்களையும் ஒன்றாக்கிவிடுவது,     குறிப்பிட்ட கால முறையை
அனுசரிப்பது என்று ஒப்புக்கொண்டார்கள். அவர்கள்   எல்லோருமே
சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அல்ல.