பக்கம் எண் :

502சத்திய சோதனை

Untitled Document
எங்களுக்கு எந்தவிதமான தீங்கும்     நேர்ந்து விடவில்லை. இதற்கு
மாறாக, ரகசியப் போலீஸ்          அதிகாரிகளுக்கு முன்னாலேயே
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது,குடியானவர்களை
மேலும் பயம் இல்லாதவர்களாக்கியது. ரகசியப்  போலீஸைக் குறித்து
விவசாயிகளுக்கு இருந்த அளவு கடந்த பயம் ஒருபுறத்தில் அவர்கள்
மனத்தில் இருந்து விரட்டப் பட்டதோடு     மற்றோர் புறத்தில் அந்த
அதிகாரிகள் இருந்ததால்           வாக்குமூலத்தை மிகைப்படுத்திக்
கூறிவிடாதிருப்பதற்கும் விவசாயிகளுக்கு அது  இயற்கையாகவே ஒரு
தடையாகவும் இருந்தது. மக்களை வலையில்   சிக்கவைத்து விடுவது
ரகசியப் போலீஸ் நண்பர்களின்      வேலை. ஆகவே, விவசாயிகள்
எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாயிற்று.

     தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை        உண்டாக்க நான்
விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக  நடந்துகொள்ளுவதன் மூலம்
அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத்
தோட்ட முதலாளிகள் மீது           கடுமையான குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச்  சந்தித்துப்
பேசுவது          என்று வைத்துக்கொண்டேன். தோட்டக்காரர்கள்
சங்கத்தினரையும் சந்தித்தேன்.          விவசாயிகளின் குறைகளை
அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட       முதலாளிகளின்
கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட   முதலாளிகளில்
சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்;
மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.

17 என் சகாக்கள்

     பிரஜ்கிஷோர் பாபுவும் ராஜேந்திர பாபுவும் இணையே இல்லாத
ஒரு ஜோடி. அவர்களுக்கு இருந்த    அபார பக்தியின்  காரணமாக,
அவர்களுடைய உதவி இல்லாமல் நான் ஓர் அடியும் எடுத்து வைக்க
முடியாமல் இருந்தது. அவர்களுடைய சீடர்கள் அல்லது சகாக்களான
சம்பு பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு இவர்களும்
மற்ற     வக்கீல்களும் எப்பொழுதும் எங்களுடன் இருந்து வந்தனர்.
விந்தியா பாபுவும் ஜனக்தாரி பாபுவும்   அப்போதைக்கப்போது வந்து
எங்களுக்கு உதவி செய்வார்கள்.   இவர்கள் எல்லோரும் பீகாரிகள்.
இவர்களுக்கு இருந்த முக்கியமான வேலை    விவசாயிகளிடமிருந்து
வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளுவது.

     பேராசிரியர் கிருபளானியும்       எங்களோடு வந்து சேர்ந்து
கொள்ளாமல் இருந்துவிட முடியாது. அவர் சிந்திக்காரர்.  என்றாலும்,
பீகாரில் பிறந்தவரைவிட உண்மையான பீகாரியாக அவர்