பக்கம் எண் :

506சத்திய சோதனை

Untitled Document
18 கிராமங்களுக்குள் பிரவேசம்

     சாத்தியமான வரையில் ஓர் ஆண்,    ஒரு பெண் இவர்களின்
மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் வைத்தோம். இந்தத்
தொண்டர்களே வைத்திய உதவி செய்து, சுகாதாரத்தையும் கவனித்துக்
கொள்ள வேண்டும். கிராமப்      பெண்களிடையே பெண்கள் மூலம்
சேவை செய்ய வேண்டும்.

     மிகவும் சாதாரணமானதே  வைத்திய உதவி. விளக்கெண்ணெய்,
கொயினா,கந்தகக் களிம்பு ஆகியவையே தொண்டர்களிடம் கொடுத்த
மருந்துகள். ஒரு நோயாளிக்கு அழலை படித்திருந்தாலோ, மலச்சிக்கல்
இருப்பதாக அவர் கூறினாலோ,        அவருக்கு விளக்கெண்ணெய்
கொடுக்க வேண்டும். ஜு ரம் இருந்தால்   முதலில் விளக்கெண்ணெய்
கொடுத்துவிட்டுப் பிறகு கொயினா      கொடுக்க வேண்டும். கட்டிச்
சிரங்கோ, சொறி சிரங்கோ இருந்தால், பாதிக்கப் பட்டிருந்த இடத்தில்
நன்றாக  அலம்பிவிட்டுக்      கந்தகக் களிம்பைத் தடவ வேண்டும்.
மருந்தை          வீட்டுக்கு கொண்டு போக     நோயாளி யாரும்
அனுமதிக்கப்படுவதில்லை. நோய் சிக்கலானதாக  இருந்தால், டாக்டர்
தேவ், வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒவ்வொரு   முக்கியமான
கிராமத்திற்கும் போய் வருவார்.

     இந்த எளிய வைத்திய உதவியை ஏராளமான   மக்கள் பெற்று
வந்தனர். கிராம மக்களுக்கு        இருந்த நோய்கள் மிகச் சிலவே.
நிபுணர்களின் உதவியின்றிச்     சாதாரணமான சிகிச்சையினாலேயே
குணமாகிவிடக் கூடியவை அவை.       இதை நினைவில் வைத்துக்
கொண்டால் எங்களுடைய         வேலைத் திட்டம் விசித்திரமாகத்
தோன்றுவதற்கில்லை. மக்களைப்   பொறுத்தவரையில் அவர்களுக்கு
இதனால் அற்புதமான வகையில் நன்மை ஏற்பட்டது.

     சுகாதாரத்தைப் போதிப்பதே     மிகவும் கஷ்டமாக இருந்தது.
எதையும் தாங்களே செய்து கொள்ள        மக்கள் தயாராயில்லை.
வயல்களில் வேலை செய்யும்         தொழிலாளர்கள்கூட, தங்கள்
குப்பைகளைத் தாங்களே கூட்டி எடுத்துச்    சுத்தம் செய்துகொள்ள
விரும்புவதில்லை. ஆனால்,       டாக்டர் தேவ் எளிதில் உற்சாகம்
இழந்துவிடக்கூடியவர் அன்று. மற்றக்       கிராமங்களுக்கெல்லாம்
உதராணமாகும் வகையில் ஒரு கிராமத்தை       அதிகச் சுத்தமாக
வைத்திருப்பதில் அவரும்          தொண்டர்களும் தங்கள் முழுச்
சக்தியையும் உபயோகித்தனர். சாலைகளையும் வீட்டு வாசல்களையும்
பெருக்கி சுத்தம் செய்தனர்.          கிணறுகளைச் சுத்தம் செய்து,
அவற்றிற்குப்      பக்கத்திலிருந்த குண்டு குழிகளையெல்லாம் மண்
போட்டுச் சமப்படுத்தினார்கள்.         இவ்வேலைகளைச் செய்யத்
தங்களுக்குள்ளே தொண்டர்களைத் திரட்டிக் கொள்ளுமாறு