பக்கம் எண் :

கிராமங்களுக்குள் பிரவேசம்507

Untitled Document
அன்போடு கிராமவாசிகளைத் தூண்டினர்.        சில கிராமங்களில்
ஜனங்கள்     வெட்கமடைந்து, தாங்களும் இவ்வேலையில் ஈடுபட்டு
விடும்படி செய்தனர். மற்றக்        கிராமங்களிலோ, மக்கள் அதிக
உற்சாகத்துடன் வேலை செய்தார்கள்.          என் மோட்டார் ஓர்
இடத்திலிருந்து            மற்றோர் இடத்திற்குச் செல்லுவதற்கான
சாலைகளைக்கூடப் போட்டுவிட்டார்கள்!        இவ்விதமான இனிய
அனுபவங்களுடன் மக்களின் அசிரத்தையினால்  உண்டான கசப்பான
அனுபவங்களும் இல்லாது போகவில்லை.   இத்தகைய வேலைகளைச்
செய்வது தங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதென்று கிராமவாசிகளில்
சிலர் கூறிவிட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

     ஓர் அனுபவத்தைக் குறித்து இங்கே குறிப்பிடுவது மிகையாகாது.
இதைப்பற்றி இதற்கு முன் நான்       பல கூட்டங்களிலும் சொல்லி
இருக்கிறேன். பீதிகர்வா என்பது ஒரு சிறிய கிராமம்; அங்கே எங்கள்
பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது.    அதற்குப் பக்கத்திலுள்ள இன்னும்
சிறிய ஒரு கிராமத்திற்கு நான் போயிருந்தபோது, சில      பெண்கள்
மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டேன்.
அப் பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை
என்று கேட்கும்படி என்        மனைவியிடம் சொன்னேன். அவள்
அவர்களோடு பேசினாள். அதில் ஒரு பெண்     என் மனைவியைத்
தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று     பின்வருமாறு கூறினாள்:
“வேறு  ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே
இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது      நான் கட்டியிருக்கும்
இந்தப் புடவை ஒன்றுதான்;           இதை எப்படித் துவைப்பது?
மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள்.
அப்பொழுது தினமும் நான்        குளித்துத் துணிகளைச் சுத்தமாக
வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்.”

     இந்தக் குடிசையிலிருந்த       இந்த நிலைமை அபூர்வமானது
அன்று. இந்தியக்            கிராமங்கள் பலவற்றில் இதே போன்ற
நிலைமையைக் காணலாம். இந்தியாவில் எண்ணற்ற     குடிசைகளில்
மக்கள், எந்த விதமான தட்டுமுட்டுச் சாமான்களோ,  மாற்றிக் கட்டிக்
கொள்ளுவதற்கு வேறு துணியோ இல்லாமல்      தங்கள் மானத்தை
மறைப்பதற்கு வெறும் கந்தையுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

     வேறோர் அனுபவத்தையும்         இங்கே குறிப்பிடுகிறேன்.
சம்பாரணில் மூங்கிலுக்கும்         நாணலுக்கும் குறைவே இல்லை.
பீதிகர்வாவில் பள்ளிக்கூடத்திற்கு       மூங்கிலையும் நாணலையுமே
கொண்டே குடிசை போட்டிருந்தார்கள். யாரோ    ஒருவர்-பக்கத்துத்
தோட்ட முதலாளியின்      ஆளாக இருக்கக்கூடும்-ஒரு நாள் இரவு
குடிசைக்குத்      தீ வைத்து விட்டார். எரிந்து போன குடிசைக்குப்
பதிலாக மூங்கிலையும் நாணலையுமே கொண்டு     மற்றோர் குடிசை