பக்கம் எண் :

508சத்திய சோதனை

Untitled Document
கட்டுவது உசிதமன்று என்று          கருதப்பட்டது. ஸ்ரீ சோமனும்,
கஸ்தூரிபாயுமே         அப்பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார்கள்.
பள்ளிக்கூடத்திற்குச் செங்கல்    கட்டிடமே கட்டி விடுவதென்று ஸ்ரீ
சோமன் முடிவு செய்தார். உழைப்பில் அவர்     காட்டிய உற்சாகம்
மற்றவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டதால்,    பலர் அவருடன்
ஒத்துழைத்தார்கள். சீக்கிரத்திலேயே     ஒரு செங்கல் வீடு தயாராகி
விட்டது. இக்கட்டிடம் கொளுத்தப்பட்டுவிடும் என்ற    பயமே பிறகு
இல்லை.

     இவ்விதம் தொண்டர்கள், தங்கள்   பள்ளிக்கூடங்கள், சுகாதார
வேலை, வைத்திய உதவி ஆகியவைகளினால்      கிராம மக்களின்
நம்பிக்கையையும் மதிப்பையும்  பெற்றனர்.        அவர்களிடையே
இத்தொண்டர்களுக்கு நல்ல செல்வாக்கும் ஏற்பட்டது.

     ஆனால், இந்த ஆக்க வேலையை நிரந்தரமான அடிப்படையில்
அமைத்துவிட வேண்டும் என்று            எனக்கிருந்த நம்பிக்கை
நிறைவேறவில்லை என்பதை வருத்தத்துடன் நான் ஒப்புக் கொள்ளவே
வேண்டும். தொண்டர்கள் எல்லோரும் அங்கே கொஞ்ச  காலத்திற்கே
ஊழியம் செய்ய வந்தார்கள். ஊதியமின்றி நிரந்தரமாக    அங்கிருந்து
வேலை செய்யப் பீகாரிலிருந்து      தொண்டர்கள் கிடைக்கவில்லை.
சம்பாரணில் என் வேலை முடிந்ததுமே,  இதற்கு மத்தியில் எனக்காக
உருவாகி வந்த வெளி வேலை,         என்னை இழுத்துக்கொண்டு
போய்விட்டது. என்றாலும், சம்பாரணில் சில மாதங்கள் செய்த வேலை
ஆழ வேர்கொண்டு விட்டதால், அதன் பயனை இன்று கூட ஏதாவது
ஒருவகையில் அங்கே காணலாம்.

19 கவர்னர் நல்லவராகும்போது

     முந்திய அத்தியாயங்களில் நான்   விவரித்திருப்பதைப் போல்
ஒரு பக்கத்தில் சமூக சேவை       நடந்துகொண்டிருக்க, மற்றொரு
பக்கத்தில் விவசாயிகளின் குறைகளைப்  பற்றிய வாக்குமூலங்களைத்
தயார் செய்யும் வேலையும் வேகமாக       நடந்துகொண்டு வந்தது.
ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள்     பதிவாயின. இதனால், பலன்
இல்லாது  போகாது. வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் அதிகமாக
வரவர, தோட்ட முதலாளிகளுக்குக்         கோபம் அதிகமாயிற்று.
என்னுடைய           விசாரணைக்கு விரோதமாகத்    தங்களால்
ஆனதையெல்லாம் செய்ய அவர்கள் முற்பட்டனர்.

     ஒரு நாள் பீகார் அரசாங்கத்தினிடமிருந்து எனக்கு ஒரு கடிதம்
வந்தது. “உங்கள்  விசாரணை நீண்ட காலத்திற்கு வளர்ந்து கொண்டு
போய்விட்டது. அதை   முடித்துவிட்டு, இப்பொழுது நீங்கள் பீகாரை
விட்டுப் போய்விடலாமல்லவா?” என்ற        முறையில் அக்கடிதம்
இருந்தது. கடிதம் மரியாதையாகவே எழுதப்