பக்கம் எண் :

516சத்திய சோதனை

Untitled Document
நம்பிக்கையை இனியும் நான் விடாமல்தான் இருப்பேன்.

     அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்த சமயத்தில்
ஆசிரமத்தின் நெசவுக்     கொட்டகைக்குக் கடைகால் போட்டோம்.
ஏனெனில், அச்சமயம் அசிரமத்தில் முக்கியமாக நடந்துவந்த வேலை,
கைநெசவு. கையினால் நூற்பதை        ஆரம்பிப்பது அதுவரையில்
எங்களுக்குச் சாத்தியமாக வில்லை.

22 உண்ணாவிரதம்

     முதல் இரு வாரங்கள் வரையில்    ஆலைத் தொழிலாளர்கள்
அதிக தீரத்தோடும், தன்னடக்கத்துடனும்    நடந்து கொண்டார்கள்.
தினந்தோறும்            பெரிய பொதுக்  கூட்டங்களும் நடந்தன.
அச்சமயங்களில்        அவர்களுடைய பிரதிக்ஞைகளைக் குறித்து
அவர்களுக்கு           ஞாபகப்படுத்துவேன். ‘உயிரை விட்டாலும்
விடுவோமேயன்றி அளித்த    வாக்கை மாத்திரம் மீறிவிடமாட்டோம்’
என்று அவர்கள் உரக்கக்கூறி எனக்கு உறுதி கூறுவார்கள்.

     ஆனால், கடைசியாக அவர்கள்     சோர்வின் அறிகுறியைக்
காட்டத் தலைப்பட்டு விட்டனர். உடம்பு பலவீனமாக  ஆக மனிதன்
சீக்கிரத்தில் கோபப்படுவதுபோல,        வேலைநிறுத்தம் பலவீனம்
அடைவதாகத் தோன்றியதும்,     கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப்
போகிறவர்கள் விஷயத்தில்     தொழிலாளர்கள் கொண்ட போக்கு
மேலும்  மேலும் ஆபத்தானதாகிக்       கொண்டு வந்தது. எங்கே
முரட்டுத்தனமான செய்கைகளில்     இறங்கி விடுவார்களோ என்று
பயப்பட்டேன். தினந்தோறும் கூட்டத்திற்கு வரும்    தொழிலாளரின்
தொகையும் குறைந்து வந்தது. கூட்டத்திற்கு வந்தவர்களும், சோர்வும்
கிலேசமும்          அடைந்திருந்தார்கள் என்பது அவர்களுடைய
முகக்குறிகளிலிருந்து   தெரிந்தது. கடைசியாகத் தொழிலாளர் உறுதி
குலைந்து வருகின்றனர் என்று        எனக்குத் தகவல் கிடைத்தது.
இதனால், பெரும் கவலையடைந்தேன்.        இந்நிலைமையில் என்
கடமை என்ன என்பதைக் குறித்துத்   தீவிரமாகச் சிந்திக்கலானேன்.
தென்னாப்பிரிக்காவில் மகத்தானதொரு    வேலை நிறுத்தம் நடத்திய
அனுபவம் எனக்கு உண்டு.      ஆனால், இங்கே எனக்கு ஏற்பட்ட
நிலைமை முற்றிலும் மாறானது.          நான் கூறிய யோசனையின்
பேரிலேயே ஆலைத் தொழிலாளர்கள் பிரதிக்ஞை செய்துகொண்டனர்.
தினந்தோறும் அதை             என் முன்னால் மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்தியும் கூறிவந்தார்கள். அப்படியிருக்க அப்பிரதிக்ஞையை
மீறி, அவர்கள்     நடந்துகொண்டு விடக்கூடும் என்பதை என்னால்
நினைக்கவும் முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட    இந்த உணர்ச்சிக்கு
அடிப்படைக் காரணமாக இருந்தது,            என் தற்பெருமையா,
தொழிலாளர்களிடம்          நான் கொண்டிருந்த அன்பா, அல்லது
சத்தியத்தினிடம் எனக்கு