பக்கம் எண் :

520சத்திய சோதனை

Untitled Document
அவ்வளவு பரிதாபகரமானதுமாகும். மிட்டாய்  வினியோகத்தில் நடந்த
சம்பவம் அது.           மில் முதலாளிகள் மிட்டாயை ஏராளமாகத்
தருவித்திருந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான தொழிலாளரிடையே அதை
எப்படி வினியோகிப்பது என்பதே     பெரிய பிரச்னையாகி விட்டது.
வேறு எந்த இடத்திலும் அவர்களையெல்லாம்       ஒன்றாகக் கூட்டி
வைப்பது என்பது முற்றும்    அசௌகரியமாக இருந்தது. ஆகையால்,
திறந்த வெளியில், அதுவும் அவர்கள்       எந்த மரத்தின் அடியில்,
இருந்து பிரதிக்ஞை        செய்தார்களோ அதே மரத்தின் அடியில்,
அவர்களுக்கு மிட்டாயை          வினியோகிப்பதுதான் சரி என்று
தீர்மானிக்கப்பட்டது.

     இருபத்தொரு நாட்கள்          கண்டிப்பான கட்டுப்பாட்டை
அனுசரித்து வந்திருக்கும் தொழிலாளர்கள்,  எந்தவிதமான கஷ்டமும்
இன்றி ஒழுங்காக நின்று   வினியோகிக்கப்படும் மிட்டாயை வாங்கிக்
கொள்ளுவார்கள்,    மிட்டாய் வாங்கப் போட்டி போட்டுக் கொண்டு
மேலே விழமாட்டார்கள் என்று நிச்சயமாக   நம்பி இருந்துவிட்டேன்.
ஆனால், இதைச்               சோதிக்கும் சமயம் நேர்ந்தபோது,
வினியோகிப்பதற்கு அனுசரித்த       எல்லா முறைகளும் பலிக்காது
போயின.     வினியோகிக்க ஆரம்பித்த இரண்டு நிமிஷங்களுக்குள்
அவர்கள் வரிசையெல்லாம் கலைந்து விடும்;      மீண்டும் மீண்டும்
குழப்ப நிலைமை    உண்டாகிவிடும்.       மில் தொழிலாளர்களின்
தலைவர்கள், ஒழுங்கை நிலை நிறுத்த என்ன முயன்றும் பயனில்லை.
குழப்பமும், நெருக்கித் தள்ளுவதும்,    போட்டியும் முடிவில் தாங்க
முடியாதவை      ஆகிவிட்டன. இக்குழப்பத்தில் காலில் மிதியுண்டு
ஏராளமான மிட்டாய்கள் பாழாயின.  கடைசியாகத் திறந்த வெளியில்
வினியோகிப்பது என்பதையே        கைவிட்டு விட்டனர். மிஞ்சிய
மிட்டாய்களைச் சிரமப்பட்டு மிர்ஜா பூரிலிருந்த சேத்  அம்பாலாலின்
பங்களாவுக்குக் கொண்டு போனோம். மறுநாள்    அந்தப் பங்களாத்
தோட்டத்தில் எந்தவிதக்           கஷ்டமும் இல்லாமல் மிட்டாய்
வினியோகிக்கப் பட்டது.

     இச்சம்பவத்தின் வேடிக்கையான       அம்சம் தெளிவானதே.
ஆனால், இதிலுள்ள பரிதாபப் பகுதியைக் குறித்து கொஞ்சம் சொல்ல
வேண்டும்.        பின்னால் இதைப்பற்றி    விசாரித்தால் உண்மை
வெளியாயிற்று. பிரதிக்ஞை          எடுத்துக்கொண்ட மரத்தடியில்
மிட்டாய்கள்       வினியோகிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து
கொண்டுவிட்ட அகமதாபாத்திலிருந்த பிச்சைக்காரர்கள்   எல்லோரும்
அங்கே ஏராளமாகப் போய்க் கூடி விட்டார்கள். பட்டினியால் வாடிய
அவர்கள்  மிட்டாய்களைப் பெற முண்டியடித்துக்கொண்டு போனதே
அங்கே ஏற்பட்ட குழப்பத்திற்கும் ஒழுங்கின்மைக்கும் காரணம்.

     நம் நாட்டில் வறுமையும்        பட்டினியும் மக்களை வாட்டி