பக்கம் எண் :

கேடாச் சத்தியாக்கிரகம்521

Untitled Document
வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை
பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச்
சோற்றுக்காகப்        போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய
உணர்ச்சிகளே இல்லாதவர்களாக     அவர்களை ஆக்கி விடுகிறது.
நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு      வேலை கொடுப்பதற்கு
வேண்டிய காரியங்களைச் செய்யாமல்,  வயிற்றுப் பாட்டுக்கு வேலை
செய்தாக வேண்டும் என்று            அவர்களை வற்புறுத்தாமல்,
அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.

23 கேடாச் சத்தியாக்கிரகம்

     கொஞ்சம் ஓய்ந்து           மூச்சு விடுவதற்கும்கூட எனக்கு
அவகாசமில்லை. அகமதாபாத்       ஆலைத் தொழிலாளர் வேலை
நிறுத்தம் முடிவுற்றுவுடனேயே        நான் கேடாச் சத்தியாக்கிரகப்
போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று.

     கேடா ஜில்லாவில் எங்கும்             விளைச்சல் இல்லாது
போய்விட்டதனால்,  பஞ்சம் வரக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
அந்த ஆண்டு நிலவரி வசூலை நிறுத்தி  வைத்துவிடும்படி செய்வது
எப்படி என்பதைக்     குறித்துக் கேடாப் பட்டாதார்கள் யோசித்துக்
கொண்டிருந்தார்கள்.

     விவசாயிகளுக்கு நான்      திட்டமான    ஆலோசனையைக்
கூறுவதற்கு முன்பே           ஸ்ரீ அமிர்தலால் தக்கர் அங்கிருந்த
நிலைமையைப் பற்றி விவாதித்தறிந்து,   அப்பிரச்னையைக் குறித்துக்
கமிஷனருடன் நேரில் விவாதித்திருந்தார்.          ஸ்ரீ மோகன்லால்
பாண்டியாவும், ஸ்ரீ சங்கரலால் பரீக்கும்         இப் போராட்டத்தில்
ஈடுபட்டனர். ஸ்ரீ வித்தல்பாய் பட்டேல்.         காலஞ் சென்ற ஸர்
கோகுலதாஸ் ககன் தாஸ் பரீக் ஆகியவர்களைக் கொண்டு பம்பாய்ச்
சட்டசபையில்           கிளர்ச்சியையும் ஆரம்பித்திருந்தனர். இது
சம்பந்தமாகப் பன்முறை கவர்னரிடமும் தூது சென்றனர்.

     இந்தச் சமயத்தில் நான் குஜராத்தி சபைக்குத்     தலைவனாக
இருந்தேன். இச்சபை, அரசாங்கத்திற்கு மனுக்களையும் தந்திகளையும்
அனுப்பியது. கமிஷனர் செய்த  அவமரியாதைகளையும், கமிஷனரின்
மிரட்டல்களையும்          சகித்துக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தில்
அதிகாரிகளின் நடந்தை மிகக் கேவலமாகவும்    கேலிக்கூத்தாகவும்
இருந்தது. அவை, இன்று      நம்பக் கூடாத அளவுக்கு அவ்வளவு
மோசமானவை.

     விவசாயிகளின் கோரிக்கை,     பட்டப்பகல் போல அவ்வளவு
தெளிவானது; மிகவும் மிதமானது. ஆகவே, அதை   ஏற்றுக் கொள்ள
வேண்டியதுதான் நியாயமாக இருந்தது.      மகசூல், சாதாரணமாகக்
கிடைக்க வேண்டியதில் கால்வாசியும் அதற்குக்      குறைவாகவுமே
இருந்துவிடுமானால், அந்த ஆண்டுக்கு நிலத்