பக்கம் எண் :

522சத்திய சோதனை

Untitled Document
தீர்வை வசூலை நிறுத்தி வைக்கும்படி,    நிலத்தீர்வை விதிகளின்படி
விவசாயிகள் கேட்கலாம். கால்வாசிக்கும்         அதிகமாக மகசூல்
இருக்கிறது என்பது           சர்க்காரின் கணக்கு. விவசாயிகளோ,
கால்வாசிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருக்கிறது என்றார்கள்.
ஆனால், இவர்கள் கூறுவதைக் கேட்டுக்கொள்ளும்   மனப்போக்கில்
அரசாங்கம் இல்லை. மத்தியஸ்தர்    முடிவுக்கு விட்டுவிட வேண்டும்
என்ற பொதுஜனக் கோரிக்கை,      தங்களுடைய கௌரவத்திற்குக்
குறைவானது என்று     அரசாங்கம் கருதியது. முடிவாக மனுக்களும்
கோரிக்கைகளும் பயனில்லாது போய் விடவே,       நான் என் சக
ஊழியர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு,  சத்தியாக்கிரகத்தை
மேற்கொள்ளுமாறு பட்டாதார்களுக்கு யோசனை கூறினேன்.

     இந்தப் போராட்டத்தில் கேடாத் தொண்டர்களே அன்றி எனக்கு
முக்கியமான தோழர்களாக இருந்தவர்கள்    ஸ்ரீ வல்லபாய் பட்டேல்,
சங்கரலால் பாங்கர்,  ஸ்ரீ மதி அனுசூயா பென்,       ஸ்ரீ இந்துலால்
யாக்ஞிக், மகாதேவ தேசாய் முதலியவர்களும்    மற்றோரும் ஆவர்.
இப்போராட்டத்தில் சேர்ந்ததால் ஸ்ரீ வல்லபாய் பட்டேல்,  ஏராளமான
வருமானத்தை அளித்ததும், வளர்ந்து    கொண்டு வந்ததுமான தமது
வக்கீல்           தொழிலை நிறுத்தி வைத்து விட நேர்ந்தது. பிறகு
அத்தொழிலை அநேகமாக அவர்         மேற்கொள்ள முடியாமலே
போய்விட்டது.

     நதியாத்திலிருந்த அனாதாசிரமத்தை எங்கள்  தலைமை ஸ்தலம்
ஆக்கிக்கொண்டோம். நாங்கள்          எல்லோரும் தங்குவதற்குப்
போதுமானதாக        இதைவிடப்    பெரிய   இடம் எங்களுக்குக்
கிடைக்கவில்லை. சத்தியாக்கிரகிகள்      கீழ்க்கண்ட பிரதிக்ஞையில்
கையெழுத்திட்டனர்.

     “எங்கள் கிராமங்களில் மகசூல்   கால் பாகத்திற்கும் குறைவாக
இருக்கிறது என்பதை அறிந்தே அடுத்த      ஆண்டுவரையில் நிலத்
தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு      அரசாங்கத்தைக் கேட்டுக்
கொண்டோம். ஆனால், எங்களுடைய வேண்டுகோளை   அரசாங்கம்
ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால்,       கீழே கையொப்பம் இட்டு
இருப்பவர்களாகிய நாங்கள், இவ்வருஷத்திற்கு முழுத் தீர்வையையோ
பாக்கியாக இருக்கும் தீர்வையையோ அரசாங்கத்திற்கு   நாங்களாகக்
கொடுப்பதில்லை என்று இதன் மூலம் சத்தியம் செய்து கொள்கிறோம்.
அரசாங்கம்,          தனக்குச் சரியெனத் தோன்றும் எல்லாச் சட்ட
நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதோடு   நாங்கள்
தீர்வை செலுத்தாததால் ஏற்படக்கூடிய விளைவுகளை மகிழ்ச்சியுடனும் அனுபவிப்போம். எங்கள் நிலங்கள்       பறிமுதல் ஆகிவிட விட்டு
விடுவோமேயன்றி   நாங்களாக வலியத்தீர்வையைச் செலுத்தி, எங்கள்