கட்சி பொய்யானது என்று கருதப்பட்டுவிடுவதற்கோ,    எங்கள் சுய       மதிப்புக்கு இழுக்கு நேர்ந்துவிடுவதற்கோ,      நாங்கள் அனுமதிக்க       மாட்டோம். என்றாலும்,       ஜில்லா முழுவதிலும் நிலத்தீர்வையின்       இரண்டாவது தவணையை வசூலிப்பதை நிறுத்தி வைக்க  அரசாங்கம்       சம்மதிக்குமானால்,                எங்களில் வரி செலுத்துவதற்குச்       சக்தியுள்ளவர்கள்,       முழு நில வரியையோ அல்லது பாக்கியாக       இருக்கும்        நிலத்தீர்வையின் மீதத்தையோ செலுத்திவிடுவோம்.       தீர்வையைச் செலுத்திவிடக்    கூடியவர்கள், இன்னும் செலுத்தாமல்       இருந்து வருவதற்குக் காரணம்,         அவர்கள் செலுத்திவிட்டால்       ஏழைகளாக இருக்கும் விவசாயிகள் பீதியடைந்து   தங்கள் தீர்வைப் பாக்கியைச் செலுத்துவதற்காகத் தங்களிடமிருக்கும்     தட்டுமுட்டுச் சாமான்களையெல்லாம் விற்றோ, கடன்பட்டோ தங்களுக்கு   மேலும் துயரத்தைத் தேடிக்கொண்டு          விடுவார்கள் என்பதே. இந்த நிலைமையில் ஏழைகளின் நன்மையை    முன்னிட்டு வரி செலுத்தச் சக்தியுள்ளவர்கள் கூட, நிலத்தீர்வையைச்    செலுத்தாமல் இருப்பது அவர்கள் கடமை என்று நாங்கள் உணருகிறோம்.”
       இந்தப் போராட்டத்தைக் குறித்துப் பல அத்தியாயங்களை நான் எழுதுவதற்கில்லை. ஆகையால்,         இதன் சம்பந்தமான அநேக இனிமையான நினைவுகளை எல்லாம்   அப்படியே விட்டுவிட்டு நான் செல்லவேண்டி இருக்கிறது.      இந்த முக்கியமான போராட்டத்தைக் குறித்து முழுவதையும் விவரமாகத்   தெரிந்து கொள்ள விரும்புவோர், கேடாவிலுள்ள           கத்தலாலைச் சேர்ந்த ஸ்ரீ சங்கரலால் பரீக் எழுதியிருக்கும் ஆதாரபூர்வமான கேடாச்     சத்தியாக்கிரகம் என்ற நூலைப் படிப்பார்களாக.
                    சம்பாரண், இந்தியாவில்         தொலைவான ஒரு முடுக்கில் இருக்கிறது. அங்கே நடந்த போராட்டத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் ஆகவில்லை. அதனால், வெளியிலிருந்து அங்கே அதிகம் பேர் வரவில்லை. ஆனால்,       கேடாப் போராட்டம் அப்படியல்ல. அங்கே நடந்துவந்தவை யாவும்        அன்றாடம் பத்திரிகைகளில் வெளியாகி வந்தன. குஜராத்திகளுக்கு     இப்போராட்டம் முற்றிலும் புதியதான ஒரு சோதனை. ஆகையால்,      அவர்கள் இதில் அதிக சிரத்தை கொண்டிருந்தனர். இந்த   லட்சியம் வெற்றியடைவதற்காகத் தங்களுடைய செல்வத்தையெல்லாம்        கொண்டுவந்து கொட்ட அவர்கள் தயாராயிருந்தார்கள்.    சத்தியாக்கிரகத்தைப் பணத்தினால் மாத்திரமே நடத்திவிட முடியாது என்பதை      அவர்கள் சுலபமாக அறிந்து கொள்ள முடியவில்லை.            சத்தியாக்கிரகத்திற்குத் தேவையானவற்றில் பணம், கடைசி      ஸ்தானத்தையே வகிக்கிறது. வேண்டாம் என்று |      |  
  |    |