பக்கம் எண் :

526சத்திய சோதனை

Untitled Document
அப்புறப்படுத்தி விடுவதாக அவர் முன் வந்தார். இதில் மற்றும் ஏழு,
எட்டு நண்பர்களும் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.

     இவர்களைச் சும்மா விட்டுவிடுவது என்பது அரசாங்கத்தினால்
முடியாத காரியம். ஸ்ரீ மோகன்லாலும்      அவருடைய சகாக்களும்
கைதானதால் மக்களின் உற்சாகம்      அதிகமாயிற்று. ஜெயிலுக்குப்
பயப்படுவதென்பது போய்விட்ட பிறகு   அடக்கமுறை மக்களுக்குத்
தைரியத்தை ஊட்டிவிடுகிறது.      விசாரணை நாளன்று கோர்ட்டில்
ஏராளமான       மக்கள் கூடிவிட்டனர். பாண்டியாவும் அவருடைய
சகாக்களும் சொற்ப காலச்      சிறைத் தண்டனை அடைந்தார்கள்.
தண்டனை விதித்தது தவறு என்பது என் அபிப்பிராயம்.  ஏனெனில்,
வெங்காய மகசூலை அப்புறப்படுத்தியது       குற்றச் சட்டத்தின்படி
‘திருட்டு’ ஆகாது. ஆனால், கோர்ட்டுக்குப் போவதைத்   தவிர்ப்பது
என்பதே கொள்கையாகையால் அப்பீல் செய்யவில்லை.

     ‘கைதி’களைச் சிறைக்குக்     கொண்டுபோனபோது, அவர்கள்
முன்னால் மக்கள் ஊர்வலம் ஒன்றும் சென்றது.   அன்று மக்கள் ஸ்ரீ
மோகன்லாலுக்கு ‘வெங்காயத்   திருடர்’ என்ற பட்டத்தை அளித்துக்
கௌரவித்தனர். இன்னும் அப்பட்டப்பெயர்      அவருக்கு இருந்து
வருகிறது.         கேடாச்   சத்தியாக்கிரகத்தின் முடிவை அடுத்த
அத்தியாயத்தில் கவனிப்போம்.

25 கேடாச் சத்தியாகிரக முடிவு

     இப்போராட்டம்    எதிர்பாராத வகையில் முடிவுற்றது. மக்கள்
களைத்துப் போய்விட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆகவே,
பணியாமல் உறுதியுடன்        இருந்தவர்களைச் சர்வ நாசத்திற்குக்
கொண்டுபோய்          விடுவதற்குத் தயங்கினேன். சத்தியாக்கிரகி
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில்,         கௌரவமான முறையில்
போராட்டத்தை முடிப்பதற்கான வழியைத்   தேடிக்கொண்டிருந்தேன்.
எதிர்பாராத வகையில் அத்தகைய வழி ஒன்று தென்பட்டது. நதியாத்
தாசில்தார் எனக்கு ஒரு       தகவல் அனுப்பினார். பணவசதியுள்ள
பட்டாதார்கள் வரியைச் செலுத்திவிட்டால்    ஏழைகளிடமிருந்து வரி
வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றார், அவர்.       அவ்விதம்
செய்யப்படும் என்று       எழுத்து மூலம் கொடுக்கும்படி அவரைக்
கேட்டேன். அவரும்      அப்படியே கொடுத்தார். தாசில்தார், தமது
தாலுகாவுக்கு மாத்திரமே    பொறுப்பு வாய்ந்தவராக இருக்க முடியும்.
ஜில்லா முழுவதற்கும் கலெக்டரே    உறுதிமொழி கொடுக்க முடியும்.
முழு ஜில்லாவுக்கும் தாசில்தாரின் உறுதிமொழி அமல் ஆகுமா என்று
கலெக்டரிடம் விசாரித்தேன்.        தாசில்தாரின் கடிதத்தில் கண்ட
முறையில் தீர்வை வசூலை         நிறுத்தி வைக்குமாறு அறிவித்து
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு