பக்கம் எண் :

536சத்திய சோதனை

Untitled Document
தடையும் ரத்தாகிவிடும்.        கமிஷனர் இதைப்பற்றிக் குறிப்பிட்டு,
எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருந்தும்       நான் மகாநாட்டிற்கு
வந்ததைப்      பாராட்டினார். ஆகவே, என்னால் முடிந்த வரையில்
மரியாதையுடன் என் கட்சியிலிருக்கும் நியாயத்தை    நான் எடுத்துக்
கூறவேண்டியதாயிற்று.

     வைசிராய்க்கு நான் எழுதிய மேலே  குறிப்பிட்டிருக்கும் கடிதம்
இதுவே:

     “26-ஆம் தேதி (ஏப்ரல்) தங்களுக்கு  ஒரு கடிதம் எழுதினேன்.
அதில் கண்ட காரணங்களைப்பற்றிக் கவனமாகச் சிந்தித்ததன் பேரில்
நான்            மகாநாட்டிற்கு வரமுடியாமல் இருக்கிறது என்பதை
அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால்,   அதன் பிறகு நீங்கள்
எனக்கு அளித்த பேட்டிக்குப் பின்னர்         மகாநாட்டில் கலந்து
கொள்ளுவது என்று என்னையே திடப்படுத்திக்கொண்டேன்.  இதற்கு
வேறு காரணமில்லாது போயினும்,    தங்களிடம் நான் கொண்டிருந்த
பெரும் மதிப்பே அதற்குக்    காரணம். மகாநாட்டிற்கு வருவதில்லை
என்று நான் எண்ணியதற்கு ஒரு காரணம்     முக்கியமான காரணம்
பொதுஜன அபிப்பிராயத்தை        உருவாக்குவதற்கு அதிகச் சக்தி
வாய்ந்த தலைவர்கள் என்று     நான் கருதும் லோகமான்ய திலகர்,
ஸ்ரீ மதி பெஸன்ட், அலி            சகோதரர்கள் ஆகியவர்களை
அம்மகாநாட்டிற்கு அழைக்காதது தான்.      மகாநாட்டிற்கு வருமாறு
அவர்களை அழைக்காது போனது       பெரிய தவறு என்றே நான்
இன்னும் கருதுகிறேன். அதைத் தொடர்ந்து    மாகாண மகாநாடுகள்
நடக்கப் போகின்றன என்று அறிகிறேன். அந்த மகாநாடுகளுக்காவது
வந்து, அரசாங்கத்திற்கு             ஆலோசனை கூறி உதவுமாறு
அத்தலைவர்கள் அழைக்கப்படுவார்களானால்,  நடந்துவிட்ட தவறை
நிவர்த்தித்துக் கொள்ள       வழி ஏற்படும் என்ற யோசனையைப்
பணிவுடன்         தெரிவித்துக் கொள்ளுகிறேன். இத்தலைவர்கள்,
ஏராளமான பொதுமக்களின்          பிரதிநிதிகளாக உள்ளவர்கள்.
அரசாங்கத்துடன் மாறுபட்ட கருத்துள்ளவர்களாக அவர்கள் இருந்த
போதிலும், எந்த அரசாங்கமும்         தலைவர்களை அலட்சியம்
செய்துவிட முடியாது என்பதைத்     தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மகாநாட்டின் கமிட்டிகளில்           எல்லாக் கட்சிகளும் தங்கள்
அபிப்பிராயத்தைத் தாராளமாக    எடுத்துக்கூற அனுமதிக்கப்பட்டது
என்பது அதே சமயத்தில்        எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னைப் பொறுத்த வரையில்,        நான் இருந்த கமிட்டியிலோ,
மகாநாட்டிலோ, வேண்டுமென்றேதான் நான் என் அபிப்பிராயத்தைக்
கூறாமல் இருந்துவிட்டேன்.       மகா நாட்டில் கொண்டுவரப்பட்ட
தீர்மானத்திற்கு என் ஆதரவை அளிப்பதோடு இருப்பது மாத்திரமே,
மகாநாட்டின் நோக்கத்திற்குச் சிறந்த சேவை    செய்ததாகும் என்று