பக்கம் எண் :

படைக்கு ஆள் திரட்டல் 537

Untitled Document
கருதினேன். அதையே     மனப்பூர்வமாகச் செய்தேன். என்னுடைய
உதவித் திட்டம் ஒன்றை              இத்துடன் தனிக் கடிதத்தில்
அனுப்பியிருக்கிறேன். அதை       அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமே
மகாநாட்டில்             நான் கூறியதைக் காரியத்தில் சீக்கரத்தில்
நிறைவேற்றலாம் என நம்புகிறேன்.

     “மற்றக் குடியேற்ற          நாடுகளைப் போன்று நாங்களும்,
சாம்ராஜ்யத்துடன் கூடிய சீக்கிரத்தில்     பங்காளிகளாக ஆகி விட
வேண்டும் என்று ஆசைப்பட்டுக்   கொண்டிருக்கிறோம். ஆகையால்,
இந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து    ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில்,
இப்பொழுது நாங்கள்       அளிக்கத் தீர்மானித்திருப்பது  போன்று,
எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூரணமான ஆதரவை  அளிக்க
வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். இவ்வாறு உதவி செய்ய
முன்வந்திருப்பதற்குக்  காரணம், இன்னும்    அதிக விரைவில் நமது
லட்சியத்தையடைய முடியும் என்று    எதிர்பார்ப்பதுதான் என்பதே
உண்மை. அந்த வகையில் கடமையைச் செய்வதானாலும்,  அப்படிச்
செய்வோர், அதே சமயத்தில்   உரிமையையும் தானே பெறுகின்றனர்.
ஆகையால், சீக்கிரத்தில் வரப்போவதாக      உங்கள் பிரசங்கத்தில்
நீங்கள்       குறிப்பிட்டிருக்கும் அரசியல் சீர்திருத்தங்கள், முக்கிய
அம்சங்களில்        காங்கிரஸ்-லீக் திட்டத்தை அனுசரித்தவையாக
இருக்கும் என்று எண்ண மக்களுக்கு         உரிமை உண்டு. இந்த
நம்பிக்கையே அரசாங்கத்திற்கு      மனப்பூர்வமான ஒத்துழைப்பை
மகாநாட்டில் அளிக்கும்படி            பலரைச் செய்தது என்பதில்
சந்தேகமில்லை.

     “முன் வைத்த காலைப் பின்     வாங்கிக் கொள்ளும்படி என்
தேச மக்களைச் செய்ய என்னால்        முடியுமானால், காங்கிரஸ்
தீர்மானங்களையெல்லாம்      அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டு,
யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வரையில் ‘சுயாட்சி’, ‘பொறுப்பாட்சி’
என்ற          பேச்சைப் பேசக்கூடாது என்று சொல்லி, அவர்கள்
அவ்விதமே செய்யும்படியும் செய்வேன்.          சாம்ராஜ்யத்திற்கு
நெருக்கடியான      சமயம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், உடல்
வலுவுள்ள          தம் புதல்வர்கள்     எல்லோரையும் இந்தியா,
சாம்ராஜ்யத்திற்குத் தியாகம் செய்துவிட முன்வரும்படியும் செய்வேன்.
இச்செய்கை ஒன்றினாலேயே,     சாம்ராஜ்யத்தில் இந்தியா  அதிகச்
சலுகைகளுடன் கூடிய பங்காளியாகிவிடுவதோடு நிறபேதங்களெல்லாம்
என்றோ இருந்தவை   என்றாகிவிடும் என்பதையும் நான் அறிவேன்.
ஆனால், அனுபவத்தில்   படித்த இந்தியர் எல்லோருமே இதைவிடக்
குறைந்த         பலனுள்ள முறையையே தீர்மானித்திருக்கின்றனர்.
பொதுமக்களிடையே படித்த            இந்தியருக்கு எந்தவிதமான
செல்வாக்குமே இல்லை என்று           சொல்லிவிடுவது இனியும்
சாத்தியமானதன்று. நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து