பக்கம் எண் :

538சத்திய சோதனை

Untitled Document
திரும்பியது முதல் விவசாயிகளுடன்    மிகவும் நெருங்கிய தொடர்பு
வைத்துக் கொண்டு வருகிறேன்.                சுயாட்சி ஆர்வம்
அவர்களிடையேயும் அதிகமாகப்        பரவியிருக்கிறது என்பதை
உங்களுக்கு      உறுதியாகக் கூற விரும்புகிறேன். சென்ற காங்கிரஸ்
மகாநாட்டிற்குப் போயிருந்தேன்.        பார்லிமெண்டு நிறைவேற்றும்
சட்டத்தின் மூலம் திட்டமாகத்       தேதியைக் குறிப்பிட்டு, அந்தக்
காலத்திற்குள் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு     முழுப் பொறுப்பாட்சியும்
அளித்து விட வேண்டும்            என்று காங்கிரஸில் தீர்மானம்
நிறைவேறியதில் என் பங்கும் உண்டு. அதைச் செய்வது தைரியமான
காரியமே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால்,  சாத்தியமான
அளவு குறைந்த காலத்திற்குள் சுயாட்சியை  அடைய முடியும் என்ற
திட்டமான எண்ணம் ஏற்படுவதைத் தவிர    வேறு எதுவும் இந்திய
மக்களைத் திருப்தி     செய்யாது என்பதை நிச்சயமாக அறிகிறேன்.
இந்த லட்சியத்தை       அடைவதற்குச் செய்யும் எந்தத் தியாகமும்
பெரியதாகாது என்று எண்ணுகிறவர்கள்       இந்தியாவில் அநேகர்
இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.  அதே சமயத்தில் எந்தச்
சாம்ராஜ்யத்தில் முடிவான அந்தஸ்தை அடைய நினைக்கிறார்களோ,
விரும்புகிறார்களோ அந்தச்      சாம்ராஜ்யத்திற்காகத் தங்களையே
தியாகம் செய்யவும் தயாராக        இருக்கவேண்டும் என்பதையும்
விழிப்புடன்         அவர்கள் அறிந்தே  இருக்கிறார்கள். ஆகவே,
சாம்ராஜ்யத்தை மிரட்டி வரும்          அபாயத்திலிருந்து அதைக்
காப்பாற்றுவதற்காக மௌனமாகவும்           மனப்பூர்வ மாகவும்
பாடுபடுவதனால்           லட்சியத்தை நோக்கிச் செல்லும் நமது
பிரயாணத்தைத்            துரிதப்படுத்திவிடலாம் என்று ஆகிறது.
சாதாரணமானதான இந்த உண்மையை   அறியாது போவது தேசியத்
தற்கொலையே ஆகும்.     சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கு நாம்
பணிபுரிந்தால்,             அப்பணியிலேயே நாம் சுய ஆட்சியை
அடைந்தவர்களாகிறோம் என்பதை நாம்  கண்டுகொள்ள வேண்டும்.

     “ஆகையால், சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு நாம் அழைக்கக்
கூடிய ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டும்  என்பது எனக்குத்
தெளிவாகிறது. ஆனால்,     பொருளுதவியைப் பொறுத்த வரையில்
அவ்வாறு நான் சொல்ல முடியாது என்றே  அஞ்சுகிறேன். இந்தியா,
தன்னுடைய சக்திக்கு              அதிகமாகவே சாம்ராஜ்யத்தின்
பொக்கிஷத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று, விவசாயிகளிடம் நான்
கொண்டிருக்கும்           நெருங்கிய தொடர்பினால் நிச்சயமாகக்
கருதுகிறேன். நான் இவ்விதம்      கூறுவது, என் நாட்டு மக்களின்
பெரும்பான்மையோரின்  அபிப்பிராயத்தைக் கூறுவதாகும் என்பதை
அறிவேன்.

     “டில்லியில் நடந்த யுத்த மகாநாடு, பொதுவானதோர்