பக்கம் எண் :

படைக்கு ஆள் திரட்டல் 539

Untitled Document
லட்சியத்திற்காக எங்கள்         வாழ்க்கையை அர்ப்பணம் செய்து
கொள்ளுவதில் ஒரு முக்கியமான காரியம் என்று  நான் கருதுகிறேன்.
எங்களில் மற்றும்        பலரும் அவ்வாறே கருதுகிறார்கள் என்றே
நம்புகிறேன். ஆனால், எங்கள் நிலைமையோ மிகவும் விசித்திரமானது.
இன்று நாங்கள்         சாம்ராஜ்யத்தில் சம பங்காளிகளாக இல்லை.
வருங்காலத்தில் அவ்வாறு ஆகலாம் என்ற    நம்பிக்கையின் பேரில்
எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம்.   அந்த நம்பிக்கை என்ன
என்பதைத் தெளிவாகவும்    சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும்
உங்களுக்கு நான் கூறாது போனால், உங்களுக்கும்  என் நாட்டிற்கும்
உண்மையாக நடந்துகொண்டவனாக மாட்டேன்.   அது நிறைவேற்றப்
பட வேண்டும் என்பதற்காக நான்    பேரம் பேசவில்லை. ஆனால்,
நம்பிக்கையில் ஏமாற்றம் என்பது,    நம்பிக்கையையே ஒழிப்பதாகும்
என்பதை நீங்கள் அறிய வேண்டும்    இன்னுமொரு விஷயத்தையும்
நான் சொல்லாமல்                இருக்கக் கூடாது. நமது சொந்த
வித்தியாசங்களையொல்லாம் மறந்து விடுமாறு      எங்களை நீங்கள்
கேட்டுக்கொண்டீர்கள்.          அதிகாரிகளின் கொடுமைகளையும்
அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதும் உங்கள்
வேண்டுகோளுக்குப்      பொருள் என்றால், அதற்கு இணங்க நான்
அசக்தனாவேன். கட்டுப்பாடான கொடுமையை    நான் கடைசிவரை
எதிர்த்தே தீருவேன். ஒருவரைக் கூடத்        துன்புறுத்தக் கூடாது
என்றும், இதற்கு முன்னால்    செய்து வந்ததைப் போல் அல்லாமல்
பொதுஜன அபிப்பிராயத்தை மதித்து          அவர்களைக் கலந்து
ஆலோசித்து நடக்க வேண்டும் என்றும்     அதிகாரிகளுக்கு அந்த
வேண்டுகோள் கூற வேண்டும்.         சம்பாரணில் நெடுங்காலமாக
இருந்துவந்த கொடுமையை எதிர்த்ததன் மூலம்,   பிரிட்டிஷ் நீதியின்
முடிவான சிறப்பை            நான் காட்டியிருக்கிறேன். கேடாவில்
அரசாங்கத்தை மக்கள்.      சபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்,
இன்றோ உண்மைக்காகத் துன்பங்களை     அனுபவிக்கவும் தாங்கள்
தயாராகும்போது சக்தி தாங்களே அன்றி        அரசாங்கம் அல்ல
என்பதை     அதே மக்கள் இப்பொழுது உணருகிறார்கள். ஆகவே,
அம்மக்களிடமிருந்து    மனக்கசப்பு மறைந்து வருகிறது. அநீதிகளை
உணரும்போது ஒழுங்கான, மரியாதையான    சட்ட மறுப்பை மக்கள்
ஆட்சி சகிப்பதால் அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகவே  இருக்க
வேண்டும் என்று அம்மக்கள்             தங்களுக்குத் தாங்களே
சொல்லிக்கொள்கின்றனர். இவ்விதம் சம்பாரண், கேடாக் காரியங்கள்,
யுத்தத்திற்கு நான்           நேரடியாக, திட்டமாகச்செய்த விஷேச
உதவிகளாகும். அத்துறையில்        என்னுடைய நடவடிக்கைகளை
நிறுத்திவைக்குமாறு            கேட்பது,  என் உயிரையே நிறுத்தி
வைத்துவிடுமாறு      நீங்கள் கேட்பதாகும்,    மிகுந்த பலத்திற்குப்