பக்கம் எண் :

540சத்திய சோதனை

Untitled Document
பதிலாக ஆன்ம சக்தியை, அதாவது அன்பின் சக்தியை  எல்லோரும்
அனுசரிக்கும்படி நான் செய்ய முடியுமானால்,     உலகம் முழுவதும்
அதனால் முடிந்ததை யெல்லாம்     செய்தாலும், அதையும் எதிர்த்து
நிற்கக்கூடிய இந்தியாவை        உங்களுக்கு நான் காட்ட முடியும்.
ஆகையால், துன்பத்தைச் சகிப்பது என்னும்      இந்த நிரந்தரமான
தருமத்தை என் வாழ்க்கையில் வெளிக்காட்டும் வகையில் என்னையே
நான் கட்டுத்திட்டங்களுக்கு      உட்படுத்திக் கொள்ளுவேன். அதில்
சிரத்தையுள்ளோரெல்லாம்        இத்தருமத்தை ஏற்றுக்கொள்ளுமாறு
உபதேசிப்பேன். நான் வேறு            ஏதாவது நடவடிக்கைகளில்
ஈடுபடுவேனாயின்,             அதன் நோக்கம் இந்தத் தருமத்தின்
இணையில்லாத உயர்வைக் காட்டுவதற்கே ஆகும்.

     “கடைசியாக முஸ்லிம் ராஜ்யங்கள்    சமபந்தமாகத் திட்டமான
வாக்குறுதியை அளிக்குமாறு   பிரிட்டிஷ் மந்திரிகளை நீங்கள் கேட்க
வேண்டும் என்று         விரும்புகிறேன். ஒவ்வொரு முகம்மதியரும்
இவைகளில் ஆழ்ந்த சிரத்தை கொண்டிருக்கிறார்   என்பதை நீங்கள்
அறிவீர்கள். ஹிந்து என்ற வகையில்          நான் அவர்களுடைய
விஷயத்தில் அசட்டையாக     இருந்துவிடக்கூடாது. அவர்களுடைய
துயரங்கள் எங்கள் துயரங்களாகவே       இருக்க வேண்டும். அந்த
ராஜ்யங்களின் உரிமைகளை     முற்றும் மதிப்பதிலும், முஸ்லிம்களின்
புண்ணிய ஸ்தலங்கள் சம்பந்தமாக    அவர்களுடைய உணர்ச்சிகளை
மதிப்பதிலும், சுயாட்சி சம்பந்தமான இந்தியாவின்      கோரிக்கையை
நியாயமாகவும் தக்க காலத்திலும்         நிறைவேற்றி வைப்பதிலுமே
சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு இருக்கிறது.    ஆங்கில நாட்டு மக்களை
நான்      நேசிக்கிறேன். ஆங்கிலேயரிடம் ஒவ்வோர் இந்தியருக்கும்
விசுவாசத்தை        உண்டுபண்ண வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதனாலேயே இதை எழுதுகிறேன்.

28 மரணத்தின் வாயிலருகில்

     படைக்கு ஆள்       திரட்டும் வேலையில் என் உடம்பையே
அநேகமாக நாசப்படுத்திக்      கொண்டுவிட்டேன். அந்த நாட்களில்
நிலக்கடலை வெண்ணெயும் எலுமிச்சம் பழமுமே   என் முக்கியமான
உணவு. அந்த வெண்ணெயையே     அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால்,
அதனால் உடம்புக்குத் தீமை உண்டாகும் என்பது எனக்குத் தெரியும்.
என்றாலும்,    அதை நான் அளவுக்கு மிஞ்சியே சாப்பிட்டுவிட்டேன்.
இதனால் எனக்கு இலேசாகச்      சீதபேதி ஏற்பட்டது. அதை நான்
அதிகமாகப் பொருட்படுத்தாமலேயே அன்று மாலை  ஆசிரமத்திற்குச்
சென்றேன். அடிக்கடி ஆசிரமத்திற்கு நான்  போய்வருவது வழக்கம்.
அந்த நாட்களில் நான் மருந்து      எதுவும் சாப்பிடுவதில்லை. ஒரு
வேளை பட்டினி    போட்டுவிட்டால் உடம்பு குணமாகிவிடும் என்று