பக்கம் எண் :

566சத்திய சோதனை

Untitled Document
     என் மனத்தில் இவ்விதமான  எண்ணங்களுடன் நான் பம்பாய்
போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த    சத்தியாக்கிரக சபையின் மூலம்
சத்தியாக்கிரகப்  படையைத் திரட்டினேன்.     சத்தியாக்கிரகத்தின்
பொருள் சம்பந்தமாகவும்,                  அதன் உள்ளிருக்கும்
முக்கியத்துவத்தையும்     பொதுமக்கள்       அறியும்படி செய்யும்
வேலையை          அத்தொண்டர்களின்   உதவியைக் கொண்டு
ஆரம்பித்தேன்.           இவ்விஷயத்தைப் போதிக்கும் துண்டுப்
பிரசுரங்களை வெளியிட்டு முக்கியமாக      இந்த வேலை நடந்தது.

     இந்த வேலை    நடந்துகொண்டிருந்தபோது ஒரு விஷயத்தை
நான் காண முடிந்தது. சத்தியாக்கிரகம்      சம்பந்தமான சமாதான
வேலையில் மக்கள் சிரத்தை கொள்ளும்படி      செய்வது மிகவும்
கஷ்டமான காரியம்         என்பதைக்கண்டேன். தொண்டர்களும்
பெருந்தொகையில் வந்து சேரவில்லை.    சேர்ந்த தொண்டர்களோ,
ஒழுங்காக முறைப்படி         பயிற்சியைப் பெறவுமில்லை. நாளாக
ஆகப்புதிதாக வந்து சேருகிறவர்களின்   தொகை அதிகமாவதற்குப்
பதிலாகக் குறைந்து கொண்டே போயிற்று. சாத்விகச் சட்ட  மறுப்புப்
பயிற்சியின் அபிவிருத்தி, நான்      ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப்
போலத் துரிதமானதாக இருக்கப்போவதில்லை என்பதையும் தெரிந்து
கொண்டேன்.

34 ‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’

     இவ்வாறு    அகிம்சையைப்     பாதுகாப்பதற்கான இயக்கம்,
மெதுவாகவே எனினும்     நிதானமாக,   ஒரு பக்கம் அபிவிருத்தி
அடைந்துகொண்டு         வந்த சமயத்தில், மற்றோர்  பக்கத்தில்
அரசாங்கத்தின் சட்ட விரோதமான     அடக்கு முறைக் கொள்கை
அதிகத் தீவிரமாக இருந்து வந்தது.          பாஞ்சாலத்தில் அந்த
அடக்குமுறை,   தனது பூரண     சொரூபத்தையும் காட்டி வந்தது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.      ராணுவச் சட்டம் அமுல்
நடத்தப்பட்டது. அதாவது,    சட்டம் என்பதே இல்லை என்றாயிற்று.
விசேட நீதிமன்றங்களை அமைத்தார்கள்.        இந்த விசேட நீதி
மன்றங்கள், எதேச்சாதிகாரியின் இஷ்டத்தை   எல்லாம் நிறைவேற்றி
வைக்கும் கருவிகளாகத்தான் இருந்தனவே அன்றி உண்மையில் நீதி
வழங்கும் மன்றங்களாக இல்லை.     நீதி முறைக்கெல்லாம் முற்றும்
மாறாகச் சாட்சியத்திற்குப் பொருந்தாத வகையில்     தண்டனைகள்
விதிக்கப்பட்டன. அமிர்தசரஸில் ஒரு பாவமும் அறியாத ஆண்களும்
பெண்களும், புழுக்களைப் போல்        வயிற்றினாலேயே ஊர்ந்து
செல்லும்படி    செய்யப்பட்டனர். ஜாலியன் வாலா பாக் கொலையே
உலகத்தின் கவனத்தையும்,          முக்கியமாக இந்திய மக்களின்
கவனத்தையும்        அதிகமாகக்      கவர்ந்ததென்றாலும், இந்த
அட்டூழியத்தின் முன்பு அப்படுகொலை கூட என்