பக்கம் எண் :

‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’ 567

Untitled Document
கண்ணுக்கு அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை.

     என்ன நேர்ந்தாலும்             பொருட்படுத்தாமல் உடனே
பாஞ்சாலத்திற்குப் போகும்படி வற்புறுத்தப்பட்டேன்.  அங்கே செல்ல
அனுமதி        அளிக்குமாறு வைசிராய்க்கு  எழுதினேன்; தந்தியும்
அடித்தேன். ஆனால்,          ஒரு பலனும் இல்லை. அவசியமான
அனுமதியில்லாமல் நான் போவேனாயின்,     பாஞ்சால எல்லையைத்
தாண்டி உள்ளே போக   நான் அனுமதிக்கப்படமாட்டேன். சாத்விகச்
சட்ட மறுப்புச் செய்தேன் என்ற         திருப்தியோடு இருந்துவிட
வேண்டியதுதான். இவ்விதம் என்ன செய்வதென்று      தோன்றாமல்
குழம்பிக் கொண்டிருந்தேன். இருந்த      நிலைமைப்படி பார்த்தால்,
பாஞ்சாலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற    தடை உத்தரவை
மீறுவது சாத்விகச்         சட்ட மறுப்பு ஆகாது என்றே எனக்குத்
தோன்றிற்று. ஏனெனில், நான்        எந்த வகையான அமைதியான
சூழ்நிலையை விரும்பினேனோ அதை     என்னைச் சுற்றிலும் நான்
காணவில்லை.        பாஞ்சாலத்தில்    நடந்துவந்த அக்கிரமமான
அடக்குமுறையோ             மக்களின்    ஆத்திரத்தை மேலும்
அதிகமாக்கிவிட்டது. ஆகையால், அப்படிப்பட்ட    சமயத்தில் நான்
சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது சாத்தியமென்றாலும், அது எரியும்
நெருப்பில்        எண்ணெயை வார்த்தது போன்றே ஆகும் என்று
எண்ணினேன்.    எனவே, போகுமாறு நண்பர்கள் கூறிய போதிலும்,
பாஞ்சாலத்திற்குப் போவதில்லை என்று  தீர்மானித்துக் கொண்டேன்.
இத்தகைய முடிவுக்கு நான் வரவேண்டியிருந்தது    எனக்கே அதிக
கஷ்டமாகத்தான் இருந்தது.     அட்டூழியங்களையும் அநீதிகளையும்
பற்றிய செய்திகள்    தினமும் வந்து கொண்டே இருந்தன. ஆனால்,
நானோ எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்துகொண்டு பல்லை
நறநறவென்று கடித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

     அச்சமயத்தில்         ஸ்ரீ ஹார்னிமனின் கையில் ‘பம்பாய்க்
கிரானிகிள்’ பத்திரிகை பலமான         சக்தியாக இருந்து வந்தது.
அதிகாரிகள் திடீரென்று அவரைப் பிடித்து வெளியேற்றிவிட்டார்கள்.
அரசாங்கத்தின் இச்செய்கை அதிசயம்     நிறைந்த காரியம் என்று
எனக்குத் தோன்றியது. அச் செய்கையை      இப்பொழுதும் மிக்க
அருவருப்பான செய்கையாகவே எண்ணுகிறேன்.  சட்ட விரோதமான
கலவரங்களை ஸ்ரீ ஹார்னிமன் என்றும்  விரும்பியதில்லை என்பதை
நான் அறிவேன். பாஞ்சால அரசாங்கம்   எனக்குப் பிறப்பித்த தடை
உத்தரவைச் சத்தியாக்கிரகக் கமிட்டியின்   அனுமதியில்லாமல் நான்
மீறியது அவருக்குப் பிடிக்கவில்லை.      சாத்விகச் சட்ட மறுப்பை
நிறுத்தி வைப்பது என்ற    முடிவை அவர் பூர்ணமாக ஆதரித்தார்.
சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பதாக           நான் அறிவிப்பதற்கு
முன்னாலேயே, சட்ட மறுப்பை நிறுத்தி