Untitled Document      சட்டமறுப்பை       உடனே   ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று       ஆகிவிட்டபோது, என்       கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக்       கூறவும், மக்களுக்குத் தைரியம்       ஊட்டவும் அவை உதவியாக       இருந்தன.      மக்களுக்கு        அதிகக் கடுமையான சோதனை       ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு  இவ்விரு பத்திரிக்கைகளும்       சிறந்த சேவை       செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத்       தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.                          பாஞ்சாலத்தில் நடந்தவைகளுக்கெல்லாம்  நானே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் கூறினார்.    ஆத்திரமடைந்த சில இளம் பஞ்சாபிகளும், ராணுவச் சட்ட     அமுலுக்குப் பொறுப்பாளி நான்தான் என்றனர்.        சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைக்காமல் இருந்தால்,         ஜாலியன் வாலாபாக் படுகொலையே நடந்திராது   என்று அவர்கள் சொன்னார்கள்.  அவர்களில் சிலரோ, நான் பாஞ்சாலத்திற்கு வந்தால்,     என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தும் அளவுக்கும் போய்விட்டார்கள். ஆனால், நான் செய்தது சரியானது என்றும், ஆட்சேபிக்க முடியாதது என்றும், எண்ணினேன். புத்தியுள்ளவர்கள்       யாரும்    அதைத்      தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கில்லை என்றும் கருதினேன்.
       பாஞ்சாலத்திற்குப் போகவேண்டும் என்று   நான் பரபரப்புடன் இருந்தேன்.         இதற்குமுன்  நான் அங்கே போனதே இல்லை. இதனாலேயே அங்கே போய் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாயிற்று.    பாஞ்சாலத்திற்கு வருமாறு என்னை அழைத்த டாக்டர் சத்தியபால்,     டாக்டர் கிச்லு, பண்டித ராம்பாஜ் தத் சௌத்ரி ஆகியோர் அச்சமயம் சிறையில் இருந்தார்கள். ஆனால், அவர்களையும் மற்றக் கைதிகளையும்   அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத் துணிய முடியாது என்று கருதினேன். நான் பம்பாயிலிருந்த சமயங்களில் ஏராளமான பஞ்சாபிகள்  என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.     அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு ஆறுதல் கூறி       உற்சாகப்படுத்தி வந்தேன். நான் அவர்களுக்கும் ஆறுதலை அளித்தது.   அச்சமயம் எனக்கு இருந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும்      தொத்திக்கொண்டு விடுவதாக இருந்தது.
       ஆனால், நான்        பாஞ்சாலத்திற்குப் போவதை அடிக்கடி ஒத்திப்போட வேண்டியதாயிற்று. அங்கே போவதற்கு  நான் அனுமதி கேட்கும் போதெல்லாம் வைசிராய்,      “பொறுங்கள்!” என்று கூறி வந்தார். ஆகையால்,    நான் போவது    காலம் தள்ளிக்கொண்டே வந்தது. |      |   
				 | 
				 
			 
			 |