பக்கம் எண் :

பாஞ்சாலத்தில்571

Untitled Document
     இதற்கு மத்தியில்         ராணுவச் சட்டத்தின் கீழ் பாஞ்சால
அரசாங்கம்  செய்தவைகளின் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு
ஹண்டர் கமிட்டி    நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ
ஸி.எப்.ஆண்டுரூஸ் இதற்குள் அங்கே போய்விட்டார். அங்கே இருந்த
நிலைமையைக் குறித்து அவர்    எழுதிய  கடிதங்கள் உள்ளத்தைப்
பிளப்பனவாக இருந்தன.     ராணுவச் சட்ட அமுல் அட்டூழியங்கள்,
பத்திரிக்கைகளில்      வெளியான விவரங்களைவிடப்  படுமோசமாக
இருக்கின்றன   என்ற அபிப்பிராயம் எனக்கு உண்டாயிற்று.  உடனே
புறப்பட்டு வரும்படி அவர் என்னை வற்புறுத்தினார். அதே சமயத்தில்
மாளவியாஜியும், உடனே    பாஞ்சாலத்திற்குப் புறப்படுமாறு எனக்குத்
தந்தி கொடுத்தார்.          “இப்போதாவது நான் பாஞ்சாலத்திற்குப்
போகலாமா?” என்று மற்றோர் முறையும்       வைசிராய்க்குத் தந்தி
கொடுத்துக் கேட்டேன்.         ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத்
தேதிக்குப் பிறகு    நான் பாஞ்சாலத்திற்குப் போகலாம் என்று பதில்
வந்தது. எனக்கு இப்பொழுது            அத்தேதி சரியாக ஞாபகம்
இல்லையென்றாலும், அக்டோபர் 17-ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

     நான் லாகூர்      போய்ச் சேர்ந்ததும் கண்ட காட்சியை என்
ஞாபகத்திலிருந்து என்றும்       அழித்துவிட முடியாது. ரெயில்வே
ஸ்டேஷனில்       ஒரு கோடியிலிருந்து மற்றோர்  கோடிக்கு ஒரே
ஜனசமுத்திரம்.       நீண்டகாலம் பிரிந்திருந்து விட்ட உறவினரைச்
சந்திப்பதற்குக் கிளம்பிவிடுவதைப் போல லாகூர் மக்கள் எல்லோரும்
வீட்டைவிட்டுக்         கிளம்பி வந்து    ஆர்வத்துடன் என்னை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   ஆனந்த மிகுதியால் அவர்கள்
தலைகால்  புரியாதவர்களாகிவிட்டனர். நான், காலஞ்சென்ற பண்டித
ராம்பாஜ் தத்தின் பங்களாவில் தங்கினேன்.    என்னை உபசரிக்கும்
பாரம் ஸ்ரீ மதி சரளாதேவிக்கு ஏற்பட்டது. உண்மையில், அது பெரிய
பாரமேயாகும். ஏனெனில்,       இப்பொழுது இருப்பதைப் போன்று
அக்காலத்திலும் நான் தங்கும் இடம்    பெரிய சத்திரமாகவே ஆகி
வந்தது.

     பாஞ்சாலத்தின் முக்கியமான தலைவர்களெல்லோரும் சிறையில்
இருந்ததால், அவர்களுடைய ஸ்தாபனங்களைப்  பண்டித மாளவியா,
பண்டித மோதிலால்ஜி, காலஞ் சென்ற       சுவாமி சிரத்தானந்தஜி
ஆகியோர்          பொருத்தமாகவே வகித்து வந்தார்கள். சுவாமி
சிரத்தானந்தஜியையும் மாளவியாவையும்      இதற்கு முன்பே நான்
நன்றாக அறிவேன்.    ஆனால், மோதிலால்ஜியுடன் முதன் முதலாக
இப்பொழுதுதான் நான்             நெருங்கிப் பழகினேன். இந்தத்
தலைவர்களும், சிறை செல்லும் பாக்கியத்திலிருந்து தப்பிய உள்ளூர்த்
தலைவர்களும், தங்கள் மத்தியில் நான்       என் சொந்த வீட்டில்
இருப்பதாகவே உணரும்படி செய்தனர். இதனால்,