பக்கம் எண் :

அமிர்தசரஸ் காங்கிரஸ்579

Untitled Document
வைத்து கொண்டிருக்கவோ, அரசாங்க  உத்தியோகத்தில் தொடர்ந்து
இருந்து கொண்டிருக்கவோ நாம் கடமைப்பட்டிருக்கவில்லை. கிலாபத்
போன்ற மிகப்       பெரியதோர் லட்சியத்தில் அரசாங்கம் நமக்குத்
துரோகம் செய்யுமாயின், அதனுடன் நாம் ஒத்துழையாமை செய்யாமல்
இருப்பதற்கில்லை. ஆகையால், நமக்கு        அரசாங்கம் துரோகம்
செய்யுமானால், அதனுடன் ஒத்துழைக்காமல் இருக்க  நமக்கு உரிமை
உண்டு.

     ஆனால், ஒத்துழையாமை என்ற சொல்  எங்கும் புழக்கத்துக்கு
வரச் சில மாதங்களாயின. அப்போதைக்கு    அது அம்மகாநாட்டின்
நடவடிக்கைகளில்           மறைந்து போயிற்று. உண்மையில் ஒரு
மாதத்திற்குப் பின்னால், அமிர்தசரஸில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில்
ஒத்துழைப்புத் தீர்மானத்தை      நான் ஆதரித்தபோது,   துரோகம்
செய்யவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே  அவ்வாறு
செய்தேன்.

37 அமிர்தசரஸ் காங்கிரஸ்

     ராணுவ ஆட்சிக் காலத்தில் சிறையில்  அடைக்கப் பட்டிருந்த
நூற்றுக்கணக்கான பஞ்சாபிகளைப் பாஞ்சால     அரசாங்கம் நீண்ட
காலம் சிறையில் வைத்திருந்துவிட      முடியாது. இவர்களெல்லாம்,
பெயரளவிலேயே            கோர்ட்டுகளாக இருந்த மன்றங்களில்
அரைகுறையான     சாட்சியங்களைக் கொண்டு சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள்.      இப் பெரிய அநீதியைக் குறித்து எங்கே
பார்த்தாலும் கண்டனங்கள் எழுந்ததால், அவர்களை மேற்கொண்டும்
சிறையில்           அடைத்து வைத்திருப்பது அசாத்தியம் என்று
ஆகிவிட்டது. காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு  முன்னாலேயே
சிறையில் இருந்தவர்களில் பெரும்பாலோர்      விடுதலை செய்யப்
பட்டுவிட்டனர். காங்கிரஸ்    மகாநாடு நடந்துகொண்டிருந்த போதே
லாலா ஹரி கிருஷ்ணலாலும்               மற்றத் தலைவர்களும்
விடுதலையாயினர்.     அலி சகோதரர்களும் சிறையிலிருந்து நேரே
காங்கிரஸு க்கு      வந்தார்கள். மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை.  பண்டித மோதிலால் நேரு தமக்கு ஏராளமான
வருமானத்தை அளித்து வந்த        வக்கீல் தொழிலைத் தியாகம்
செய்துவிட்டுப்     பாஞ்சாலத்தையே தமது தலைமை ஸ்தானமாகக்
கொண்டு மகத்தான            சேவை செய்திருந்தார். காங்கிரஸ்
மகாநாட்டுக்கு அவரே தலைவர்.            காலஞ்சென்ற சுவாமி
சிரத்தானந்தஜி வரவேற்பு கமிட்டித் தலைவராக இருந்தார்.

     இந்தச் சமயம் வரையில்          காங்கிரஸின் வருடாந்திர
நடவடிக்கையில் நான் கொண்ட பங்கு,    தேசீய மொழியில் என்
பிரசங்கத்தைச் செய்து ஹிந்தியை     அனுசரிக்கும்படி வற்புறுத்தி
வந்ததே ஆகும். அந்தப் பிரசங்கங்களில்  வெளிநாடுகளிலிருக்கும்