பக்கம் எண் :

578சத்திய சோதனை

Untitled Document
ஆனால், எனக்கு இருந்துவந்த    சங்கோஜத்தை எல்லாம் முன்பே
விட்டுவிட்டேன். குற்றமற்ற நாசுக்கான டில்லி  உருதுவில் பிரசங்கம்
செய்வதற்காக நான் - அங்கே        போனவன் அல்ல. ஆனால்,
எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில்     என் கருத்துக்களைத்
தெரிவிப்பதற்காகவே அங்கே சென்றேன். இதில் நான்    வெற்றியும்
பெற்றேன். ஹிந்தி-உருது மாத்திரமே இந்தியாவின் பொது மொழியாக
இருக்க முடியும் என்ற உண்மைக்கு இக்கூட்டம் எனக்கு நேரடியான
ருசுவாக இருந்தது.     கூட்டத்தில் இருந்தவர்களின் மனத்தை நான்
எவ்வளவு தூரம் கவர்ந்தேனோ அதே போல நான்   ஆங்கிலத்தில்
பேசியிருந்தால் கவர்ந்திருக்க முடியாது. மௌலானா  தமது சவாலை
வெளியிடவேண்டியதின் அவசியத்தை   உணர்ந்திருக்கவும் மாட்டார்.
அப்படியே அவர் வெளியிட்டிருந்தாலும்,    அதைப் பெரிதாக நான்
எடுத்துக்கொண்டும் இருக்கமாட்டேன்.

     புதிய கருத்தை எடுத்துச்   சொல்லுவதற்கு வேண்டிய ஹிந்தி
அல்லது உருதுச் சொற்கள்        எனக்கு அகப்படவில்லை. இது
ஓரளவுக்கு     எனக்குக்    கஷ்டமாகவே இருந்தது. கடைசியாக,
அக்கருத்தை     ‘நான் கோவாப்பரேஷன்’ (ஒத்துழையாமை) என்ற
ஆங்கிலச்   சொல்லால்           விவரித்தேன். முதன் முதலாக
இக்கூட்டத்திலேயே        இச்சொல்லை  நான் உபயோகித்தேன்.
மௌலானா பேசிக்கொண்டிருக்கும்போதே   எனக்கு ஓர் எண்ணம்
தோன்றியது. அரசாங்கத்தை           ஆயுதங்களைக் கொண்டு
எதிர்ப்பதென்பது   அசாத்தியமானது; விரும்பத்தக்கதல்ல என்றால்,
அநேக காரியங்களில்            அந்த அரசாங்கத்துடன் அவர்
ஒத்துழைத்துக்       கொண்டிருக்கும் போது,  சரியானபடி அதை
எதிர்ப்பது என்று அவர் பேசிக்கொண்டிருப்பது     வீண் காரியம்
என்று எண்ணினேன். ஆகையால்,        அந்த அரசாங்கத்துடன்
ஒத்துழைக்காமல் இருந்து விடுவது ஒன்றே  அதற்கு உண்மையான
எதிர்ப்பாகும் என்றும்          எனக்குத் தோன்றியது. இவ்விதம்
ஒத்துழையாமை என்ற சொல்லைப்     பிரயோகித்தேன். ஆனால்,
அச்சொல்லில்     அடங்கியுள்ள அநேக விளைவுகளைக் குறித்து
அப்பொழுது எனக்குத்      தெளிவான கருத்து எதுவும் இல்லை.
ஆகையால், நான்    விவரங்களைப் பற்றிக் கவனிக்கவே இல்லை.
பின்வருமாறு          மாத்திரம் சொன்னேன்: “முஸ்லிம்கள் மிக
முக்கியமானதோர் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.  யுத்த
சமாதான ஷரத்துக்கள்    அவர்களுக்குச் சாதகமில்லாதவைகளாக
இருக்குமாயின் -  ஆண்டவன்     அதைத்      தவிர்ப்பாராக-
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை   அவர்கள் நிறுத்திவிடுவார்கள்.
இவ்விதம்  ஒத்துழைப்பை நிறுத்தி விடுவது மக்களுக்குள்ள பறிக்க
முடியாத ஓர் உரிமை ஆகும்.        அரசாங்கம் அளித்திருக்கும்
பட்டங்களையும் கௌரவங்களையும் தொடர்ந்து