பக்கம் எண் :

காங்கிரஸ் பணி ஆரம்பம் 583

Untitled Document
ஜெயராம்தாஸ், தீர்மானத்திற்குத்      தமது திருத்தத்தை என்னிடம்
கொடுத்தார். தமக்குள்ள      இனிய சுபாவத்துடன், பிளவு ஏற்படும்
இப்பெரிய  தொல்லையிலிருந்து பிரதிநிதிகளைக் காப்பாற்றும் படியும்
என்னைக் கேட்டுக்கொண்டார்.     அவருடைய திருத்தம் எனக்குப்
பிடித்திருந்தது. இதற்கிடையில்      நம்பிக்கைக்கு எங்காவது இடம்
இருக்கிறதா என்று மாளவியாஜியின் கண் தேடிக்கொண்டே இருந்தது.
ஜெயராம்தாஸின்    திருத்தம்             இரு தரப்பாரும் ஏற்றுக்
கொள்ளக்கூடியதாக எனக்குத் தோன்றுகிறது என்று அவரிடம் நான்
கூறினேன். அடுத்த படியாக        அத்திருத்தம் லோகமான்யரிடம்
காட்டப்பட்டது. “ஸி. ஆர். தாஸ்   ஒப்புக்கொள்ளுவதாக இருந்தால்,
எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை” என்றார். அவர் முடிவாக
தேசபந்து தாஸு ம் தமது பிடியைத் தளர்த்தி அங்கீகாரத்திற்காக ஸ்ரீ
விபினசந்திரபாலை      நோக்கினார்.   மாளவியாஜிக்கு நம்பிக்கை
ஏற்பட்டது. திருத்தத்தைக் கொண்ட        காகிதச் சீட்டை அவர்
பிடுங்கிக்கொண்டு, “சரி” என்று       தேசபந்து திட்டமாகத் தமது
ஆதரவை அறிவிப்பதற்கு முன்னாலேயே, “சகோதரப் பிரதிநிதிகளே!
சமரசம் ஏற்பட்டுவிட்டது        என்பதை அறிய நீங்கள் ஆனந்த
மடைவீர்கள்” என்று கோஷித்தார். பிறகு    அங்கே கண்ட காட்சி
வர்ணிக்க     முடியாததாகும்.    கூடியிருந்தவர்களின் கரகோஷம்
பந்தலையே பிளந்துவிடும் போல் எழுந்தது.     இதுகாறும் கவலை
தேங்கியிருந்த முகங்கள் ஆனந்தத்தால் பிரகாசமடைந்தன.

     திருத்தத் தீர்மானத்தைக் குறித்து இங்கே  கூறிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியம் இல்லை. இந்த       அத்தியாயங்களில் நான்
விவரித்து வரும் என்னுடைய   சத்தியசோதனையின் ஒரு பகுதியாக
மேற்கண்ட தீர்மானத்தை எவ்வாறு     நான் கொண்டுவர நேர்ந்தது
என்பதை விவரிப்பதே இங்கே   என்னுடைய நோக்கமாகும். இந்தச்
சமரசம் என்னுடைய பொறுப்பை மேலும் அதிகரித்தது.

38 காங்கிரஸ் பணி ஆரம்பம்

     அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில்       நான் கலந்து
கொண்டது, காங்கிரஸின்         ராஜீய காரியங்களில் என்னுடைய
உண்மையான பிரவேசம் என்றே நான் கொள்ள வேண்டும்.  இதற்கு
முந்திய          காங்கிரஸ் மகாநாடுகளுக்கு நான் போனதெல்லாம்,
காங்கிரஸினிடம் எனக்குள்ள பக்தியை ஆண்டு தோறும் புதுப்பித்துக்
கொள்ளுவதைப்  போன்றதே அன்றி வேறல்ல. அந்தச் சமயங்களில்
காங்கிரஸின்           சாதாரணப் போர் வீரன் என்று தான் நான்
இருந்தேனேயல்லாமல் எனக்கென்று   குறிப்பிட்ட வேலை  எதுவும்
இல்லை. சாதாரணச் சிப்பாய் என்பதற்கு அதிகமாக  எதையும் நான்
விரும்பியதும் இல்லை.       இரண்டொரு காரியங்களைச் செய்யும்
தன்மை என்னிடம் இருக்கக்கூடும். அது