பக்கம் எண் :

584சத்திய சோதனை

Untitled Document
காங்கிரஸு க்குப் பயன்படும்      என்று    அமிர்தசரஸ் அனுபவம்
காட்டியது. பாஞ்சால விசாரணை சம்பந்தமாக  நான் செய்த வேலை,
காலஞ்சென்ற லோகமான்யர்,       தேசபந்து, பண்டித மாளவியாஜி
ஆகியவர்களுக்குத்           திருப்தியளித்தது என்பதை, அதற்கு
முன்னாலேயே என்னால் காண முடிந்தது.    விஷய ஆலோசனைக்
கமிட்டிக்கு அனுப்பும்       தீர்மானங்களைக் குறித்து ஆலோசித்த
தலைவர்களின் தனிக் கூட்டங்களுக்கு      வழக்கமாக என்னையும்
அழைப்பார்கள். தலைவர்களின்           விசேட நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர்களையும், யாருடைய சேவை தங்களுக்குத் தேவைப்
படுகின்றதோ அவர்களையும் மாத்திரமே அத்தகைய கூட்டங்களுக்கு
அழைப்பார்கள். அவ்விதம்    அழைக்கப்படாதவர்கள் சிலரும் சில
சமயங்களில் இக்கூட்டங்களுக்கு வந்து விடுவதும் உண்டு.

     அடுத்த ஆண்டில் ஒரு      காரியங்களைச் செய்வதில் நான்
சிரத்தை கொண்டேன். அவற்றைச் செய்வதில் எனக்கு  விருப்பமும்
ஆற்றலும் இருந்தன. அவற்றில் ஒன்று,        ஜாலியன் வாலாபாக்
படுகொலைக்கு       ஞாபகார்த்தச் சின்னம். இதைச் செய்வதென்று
காங்கிரஸில்            மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம்
நிறைவேறியிருந்தது.     இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட
வேண்டும். இந்த     நிதிக்கு என்னையும்    ஒரு தருமகர்த்தாவாக
நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர்
என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக்
காரியத்தில் அவருக்கு நான் அதிகம்      பின்வாங்கியவன் அல்ல
என்பது எனக்குத் தெரியும்.           நான் தென்னாப்பிரிக்காவில்
இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு       இருந்த ஆற்றலைக்
கண்டுபிடித்தேன். என்றாலும்,         சுதேச  மன்னர்களிடமிருந்து
பெருந்தொகையை வசூலித்துவிடுவது       மாளவியாஜிக்கு இருந்த
இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்
நினைவுச்    சின்னத்திற்கு ராஜாக்களிடத்திலும் மகாராஜாக்களிடமும்
பணம் கேட்பதற்கில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, இதற்கு
நிதி திரட்டும் முக்கியப் பொறுப்பு, நான் எதிர்பார்த்ததைப் போலவே
என் பேரில் தான் விழுந்தது. தாராள குணமுள்ள பம்பாயின் மக்கள்
ஏராளமாகப் பணம் கொடுத்தார்கள். ஆகையால், இந்த ஞாபகார்த்தச்
சின்னத்தின் டிரஸ்ட்டிடம் பாங்கில்      இப்பொழுது பெருந்தொகை
இருக்கிறது. ஆனால், ஹிந்துக்கள், முஸ்லிம்கள்,     சீக்கியர்களின்
ரத்தங்கள் கலந்தோடிய அந்த இடத்தில்      எந்த விதமான புனித
ஞாபகச் சின்னத்தை         எழுப்புவது என்பதே இன்று நாட்டின்
முன்பிருக்கும் பிரச்னை. இந்த மூன்று               சமூகங்களும்
ஒற்றுமையினாலும் அன்பினாலும் பிணைக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக
ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருப்பதாகவே