பக்கம் எண் :

586சத்திய சோதனை

Untitled Document

பெற்றிருந்த    இரு    தலைவர்கள் லோகமான்யரும், தேசபந்துவும்
என்பதைக் கண்டேன். காங்கிரஸ் விதிகளை அமைக்கும் கமிட்டியில்
மக்களின் பிரதிநிதிகளாக  அவர்கள்   இருவரும் இருக்க வேண்டும்
என்று கேட்டுக்  கொண்டேன்.        ஆனால், விதிகள் அமைப்பு
வேலையில் நேரடியாகக் கலந்து கொள்ளுவதற்கு     அவர்களுக்கு
அவகாசம்     இருக்காது என்பது தெரிந்ததே. ஆகையால், விதிகள்
கமிட்டியில்    என்னுடன்         அவர்களுடைய நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர்கள் இருவர் இருக்க  செய்து விடவேண்டும் என்றும்
யோசனை கூறினேன்.         இந்த யோசனையைக் காலஞ்சென்ற
லோகமான்யரும்,  காலஞ்சென்ற             தேசபந்துவும் ஏற்றுக்
கொண்டார்கள். முறையே   தங்கள்    பிரதிநிதிகளாக ஸ்ரீ மான்கள்
கேல்கர், ஐ.பி.ஸென் ஆகிய இரு  பெயர்களையும் கூறினர். விதிகள்
அமைப்புக்      கமிட்டி       உறுப்பினர்கள் ஒரு தடவையேனும்
ஒன்று சேர முடியவில்லை.      ஆனால், கடிதப் போக்குவரத்தின்
மூலமே  ஆலோசித்துக்       கொண்டோம். முடிவாக ஒருமனதான
அறிக்கையையும் சமர்ப்பித்தோம்.      இந்தக் காங்கிரஸ் அமைப்பு
விதிகளைக் குறித்து நான் ஓரளவுக்குப் பெருமை அடைகிறேன்.இந்த
விதிகள் முழுவதையும் நாம்       நிறைவேற்றி வைக்க முடிந்தால்,
இவற்றை    நிறைவேற்றுவது ஒன்றின் மூலமே நாம் சுயராஜ்யத்தை
அடைந்துவிட முடியும்          என்று நான் கருதுகிறேன். இந்தப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் காங்கிரஸின்         ராஜீய
காரியங்களில் உண்மையில் நான்    பிரவேசித்து விட்டேன் என்றே
சொல்லலாம்.

39 கதரின் பிறப்பு


     1908-இல் நான் எழுதிய    இந்திய சுயராஜ்யம் என்ற நூலில்,
இந்தியாவில் வளர்ந்து கொண்டு வரும் வறுமையைப் போக்குவதற்கு
சரியான மருந்து, கைத்தறி அல்லது         கைராட்டினமே என்று
எழுதினேன்.           அந்தச் சமயம் வரையில் கைத்தறியையோ
ராட்டினத்தையோ நான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை.
இந்திய மக்களை       வாட்டி வரும் வறுமையைப் போக்குவதற்கு
உதவியாக இருக்கும் எக்காரியமும் அதே    சமயத்தில் சுயராஜ்யம்
ஏற்படும்படி செய்யும் என்ற           கருத்தை வைத்துக்கொண்டு
அப்புத்தகத்தில் இப்படி எழுதினேன்.    தென்னாப்பிரிக்காவிலிருந்து
1915-இல் நான் இந்தியாவுக்குத்             திரும்பிய போதும்கூட
கைராட்டினத்தை நான் நேராகப்  பார்த்ததில்லை.      சபர்மதியில்
சத்தியாக்கிரக        ஆசிரமத்தை ஆரம்பித்தபோது அங்கே சில
கைத்தறிகளை வைத்தோம். அவற்றை அமைத்தவுடனே ஒரு பெரிய
கஷ்டமும்      எங்களுக்கு ஏற்பட்டது. ஆசிரமத்திலிருந்த நாங்கள்
எல்லோரும் உத்தியோகம், வியாபாரம் முதலியவைகளில்