பக்கம் எண் :

ஆங்கிலக் கனவானாக நடிப்பு59

Untitled Document
     இதன் நடுவில் என் நண்பர் என்னைப்பற்றிக் கவலைப்படுவதை
விடவில்லை.   மாமிசம்    சாப்பிடுவதில்        எனக்கு இருக்கும்
ஆட்சேபங்களில் நான் பிடிவாதமாகவே இருந்து வந்தால், என் உடல்
இளைத்துப் போவதோடு நான்      மண்டுவாகவும் இருந்துவிடுவேன்
என்று கருதினார். ஏனெனில், மாமிசம் சாப்பிடாதிருந்தால் ஆங்கிலேய
சமூகத்தில்       நான் சகஜமாகப்   பழக முடியாது என்றும் அவர்
நினைத்தார்.       என் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலேயே
இப்படியெல்லாம் எண்ணினார். சைவ உணவின் பெருமையைப்  பற்றி
கூறும் நூல்களில் கவனம்     செலுத்த நான் தலைப்பட்டு விட்டேன்
என்பதை அறிந்ததும், அப்புத்தகங்கள்      என் புத்தியைக் குழப்பி
விடுமே என்று பயந்தார்.      என் படிப்பை மறந்து விட்டு,  அந்த
ஆராய்ச்சிகளிலெல்லாம் இறங்கிப் பித்தனாகிவிடுவேன்      என்றும்
அஞ்சினார். ஆகையால்,    என்னைச் சீர்திருத்துவதற்காகக் கடைசி
முயற்சி ஒன்றையும் செய்தார். ஒருநாள், நாடகம் பார்க்கப் போகலாம்
என்று    என்னை அழைத்தார். நாடகம் பார்க்கும் முன்பு இருவரும்
ஹால்பர்ன்    போஜன விடுதியில்    சாப்பிடுவது என்றும்  ஏற்பாடு
செய்திருந்தார். அந்த போஜன     விடுதியின் கட்டடம் அரண்மனை
போன்றே எனக்குத் தோன்றியது. மேலும், விக்டோரியா ஹோட்டலில்
இருந்து வந்து விட்டப் பிறகு, நான் சாப்பிடப் போன  முதல்  பெரிய
விடுதியும் இதுதான். அந்த ஹோட்டலில் இருந்த போது நான் திக்குத்
திசை தெரியாதவனாகவே இருந்ததால் அங்கே   ஏற்பட்ட அனுபவம்
எதுவும் எனக்கு   இங்கே      உதவியாக     இருந்துவிடவில்லை.
சங்கோஜத்தினால்   நான் கேள்வி எதுவும்  கேட்கமாட்டேன் என்று
எண்ணியே என் நண்பர் என்னை இந்த விடுதிக்கு   அழைத்துவரத்
திட்டமிட்டு        இருந்தார் என்று தெரிந்தது.   அநேகர் அங்கே
சாப்பிட்டுக்கொண்டு  இருந்தார்கள்.  அவர்களுக்கு மத்தியில் நானும்
என் நண்பரும்     ஒரு மேஜையின் முன் சாப்பிட  உட்கார்ந்தோம்.
முதலில்  ‘சூப்’     வந்தது.   அது என்ன சூப் என்பது தெரியாமல்
திகைத்தேன். ஆனால், அதைப் பற்றி நண்பரிடம்  கேட்கும் தைரியம்
எனக்கு வரவில்லை. ஆகவே, பரிசாரகரைக் கூப்பிட்டேன்.   நண்பர்
நிலைமையைக் கவனித்துக் கொண்டார்.      என்ன விஷயம் என்று
என்னைக்   கடுமையாகக் கேட்டார். “  சூப் சைவ சூப்தானா என்று
விசாரிக்க விரும்பினேன்”  என்று       அதிகத் தயக்கத்துடனேயே
சொன்னேன். ‘நாகரீகமான சமூகத்தில் பழகுவதற்கு நீர்க் கொஞ்சமும்
தகுதியில்லாதவர்’ என்று அவர் ஆத்திரத்தோடு கூறினார்.  ‘ இங்கே
சரியானபடி நடந்துகொள்ள உம்மால்   முடியாது என்றால் வெளியே
போய் விடும்.   வேறு ஏதாவது         ஒரு சாப்பாட்டு விடுதியில்
சாப்பிட்டுவிட்டு வந்து எனக்காக வெளியில் காத்திரும்’     என்றார்.
இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். வெளியிலும்