பக்கம் எண் :

602சத்திய சோதனை

Untitled Document
இந்த காங்கிரஸ் மகாநாட்டில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை
ஒழிப்பு, கதர் ஆகியவைகளைப்           பற்றிய தீர்மானங்களும்
நிறைவேறின. அது முதற்கொண்டு            காங்கிரஸின் ஹிந்து
உறுப்பினர்கள்,         ஹிந்து மதத்திலிருந்த தீண்டாமை என்னும்
சாபக்கேட்டை                    ஒழித்துக் கட்டும் பொறுப்பை
மேற்கொண்டிருக்கின்றனர். கதரின் மூலம்,      இந்தியாவிலிருக்கும்
எலும்புக் கூடுகளான ஏழை மக்களுடன்          உயிரான உறவுப்
பந்தத்தையும்       காங்கிரஸ் கொண்டுவிட்டது.    கிலாபத்திற்காக
ஒத்துழையாமைப் போராட்டத்தைக்      காங்கிரஸ் மேற்கொண்டது.
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காங்கிரஸ்    அதனளவில் செய்த
பெரிய பிரத்தியட்ச முயற்சியாகும்.

44 விடைபெற்றுக் கொள்ளுகிறேன்

     இந்த அத்தியாயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட
வேண்டிய சமயம் இப்பொழுது வந்திருக்கிறது. இந்தக் கட்டத்திற்கு
மேல் என்னுடைய வாழ்க்கை மிகவும்   பகிரங்கமாக ஆகிவிட்டது.
அதில் பொதுமக்களுக்குத் தெரியாதது   எதுவுமே இல்லை. மேலும்
1921-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்களுடன்  அதிகமாக
நெருங்கியிருந்து வேலை     செய்து வந்திருக்கிறேன். ஆகையால்,
அவர்களுடன் எனக்குள்ள உறவைப் பற்றிக்    குறிப்பிடாமல் என்
வாழ்க்கைச் சம்பவங்களில் எதையுமே     அக்காலத்திற்குப் பிறகு
நான்           விவரிக்கவே முடியாது. சிரத்தானந்தஜி, தேசபந்து,
ஹக்கீம் சாகிப், லாலாஜி ஆகியவர்கள் காலஞ்சென்று விட்டார்கள்.
என்றாலும், பிரபலமான காங்கிரஸ்     தலைவர்கள் பலர் இன்னும்
வாழ்ந்து நம்முடன் இருந்து     வேலை செய்துவரும் பாக்கியத்தை
நாம் பெற்றிருக்கிறோம். நான் மேலே விவரித்துள்ளபடி, காங்கிரஸில்
பெறும் மாறுதல்கள் ஏற்பட்ட பின்னரும்    காங்கிரஸின் சரித்திரம்
இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. மேலும்,   சென்ற ஏழு
ஆண்டுகளாக           நான் செய்து வந்திருக்கும் முக்கியமான
சோதனைகளையெல்லாம்        காங்கிரஸின் மூலமாகவே செய்து
வந்திருக்கிறேன் ஆகையால், மேற்கொண்டும்        நான் செய்த
சோதனைகளைப் பற்றி        நான் கூறிக்கொண்டு போவதாயின்,
தலைவர்களுடன் எனக்குள்ள தொடர்பைப் பற்றிச் சொல்லுவதைத்
தவிர்க்கவே முடியாது.       நியாயஉணர்ச்சியை முன்னிட்டேனும்
இப்போதைக்காவது அதை     நான் செய்ய முடியாது. கடைசியாக,
இப்பொழுது நான் செய்து வரும் சோதனைகளைப்பற்றிய முடிவுகள்,
திட்டமானவை என்று      இன்னும்     சொல்லிவிடுவதற்கில்லை.
ஆகையால், இந்த வரலாற்றை இந்த இடத்தோடு  முடித்துவிடுவதே
என்னுடைய தெளிவான கடமை என்பதைக்         காண்கிறேன்.
உண்மையில் என் பேனாவும், இயற்கையாகவே அதற்குமேல் இதை