பக்கம் எண் :

விடைபெற்றுக் கொள்ளுகிறேன்603

Untitled Document
எழுதிக்கொண்டு போகவும் மறுக்கிறது.

     வாசகரிடமிருந்து இப்பொழுது           நான் விடைபெற்றுக்
கொள்ளுவதில் எனக்கு மன வருத்தம் இல்லாமலில்லை. என்னுடைய
சத்திய சோதனைகள் அதிக மதிப்பு       வாய்ந்தவை என்று நான்
கருதுகிறேன். அந்த          மதிப்பு நன்றாகப் புலப்படும்படி நான்
செய்திருக்கிறேனோ என்பதை          நான் அறியேன். உள்ளதை
உள்ளபடியே எடுத்துக்    கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம்
எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரமே  நான் கூற முடியும்.
எந்தவிதமாக நான் சத்தியத்தைக்       கண்டுகொண்டேனோ அதே
விதமாக அதை விவரிப்பதே என் இடையறாத   முயற்சியாக இருந்து
வந்திருக்கிறது. இந்தப் பயிற்சி, அழித்துவிட முடியாத மனச்சாந்தியை
எனக்கு  அளித்திருக்கிறது. ஏனெனில், சந்தேகம் உள்ளவர்களுக்கும்
சத்தியத்திலும் அகிம்சையிலும் அது     நம்பிக்கையை உண்டாக்கும்
என்று நான் ஆசையோடு நம்பி வந்திருக்கிறேன்.

     சத்தியத்தைத்தவிர வேறு     கடவுள் இல்லை என்பதை, ஒரே
மாதிரியான என்னுடைய அனுபவங்களில்        எனக்கு உறுதியாக
உணர்த்தியிருக்கின்றன. சத்தியத்தைத்        தரிசிப்பதற்குள்ள ஒரே
மார்க்கம் அகிம்சைதான்         என்பதை இந்த அத்தியாயங்களின்
ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு    அறிவுறுத்தவில்லையாயின், இந்த
அத்தியாயங்களை           எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட
சிரமமெல்லாம் வீணாயின  என்றே கொள்ளுவேன்.   இந்த வகையில்
என் முயற்சிகளெல்லாம் பலனற்றவையே என்று      நிரூபிக்கப்பட்டு
விட்டாலும், அதன் குற்றம்     என்னுடையதேயன்றி   அம்மகத்தான
கொள்கையினுடையதல்ல என்பதை வாசகர்கள்    அறிய வேண்டும்.
அகிம்சையை நாடுவதில்        எவ்வளவுதான் உள்ளன்போடு நான்
முயற்சிகள்   செய்து         வந்திருந்தாலும்,     அவை இன்னும்
குறைபாடுடையவைகளாகவும், போதுமானவை    அல்லாதனவாகவுமே
இருந்து வருகின்றன. ஆகையால்,            சத்தியத் தோற்றத்தை
அவ்வப்போது ஒரு      கண நேரம் கண்டுகொண்டது, சத்தியத்தின்
விவரிக்கவொண்ணாத பெருஞ் ஜோதியை     நான் தெரிந்துகொண்டு
விட்டதாகவே ஆகாது.      நான் தினந்தோறும் கண்ணால் பார்க்கும்
சூரியனைவிட கோடி மடங்கு           அதிகப் பிரகாசம் உடையது
சத்தியத்தின் ஜோதி. உண்மையில் நான்  கண்டிருப்பதெல்லாம், அந்த
மகத்தான பரஞ்ஜோதியின் மிகச் சிறிய மங்கலான ஒளியையேயாகும்.
ஆனால், என்னுடைய எல்லாச் சோதனைகளின் பலனாகவும் ஒன்றை
மாத்திரம் நான் நிச்சயமாகக் கூற முடியும். அகிம்சையைப் பூரணமாக
அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின்    பூரணமான சொரூபத்தையும்
தரிசிக்க முடியும்.

     பிரபஞ்சம் அனைத்திலும்         நிறைந்து நிற்பதான சத்திய
சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர்     தரிசிக்க வேண்டுமாயின்.