பக்கம் எண் :

விடைபெற்றுக் கொள்ளுகிறேன்605

Untitled Document
அவமானப்படும்படி செய்கிறது.     அனுபங்களும் சோதனைகளுமே
என்னை நிலைபெற்றிருக்கச் செய்து      எனக்கு ஆனந்தத்தையும்
அளிக்கின்றன. ஆனால்,         இன்னும் நான் கடக்க வேண்டிய
மிகக்கஷ்டமான       பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை
அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டுவிட
வேண்டும். தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும்  தன்னைக்
கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன்      வைத்துக்கொண்டு
விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின்
மிகத் தொலைவான                  எல்லையே அகிம்சையாகும்.
தற்போதைக்கேயாயினும் வாசகரிடம்           நான் விடைபெற்றுக்
கொள்ளுகிறேன். மனம், வாக்கு, காரியங்களில் அகிம்சை விரதத்தை
எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளைப்   பிரார்த்திக்கிறேன்.
அந்தப் பிரார்த்தனையில்      என்னுடன்    கலந்து கொள்ளுமாறு
வாசகரைக் கேட்டுக் கொண்டு      விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

முற்றிற்று.