பக்கம் எண் :

78சத்திய சோதனை

Untitled Document
கோழைத்தனமும்   இருந்தது. வெண்ட்னரில்  ஒரு குடும்பத்தினருடன்
நான்    வசித்து வந்தேன்.  அத்தகைய குடும்பங்களில்   வீட்டுக்கார
அம்மாளின் மகள்     விருந்தினரை உலாவ  அழைத்துச் செல்லுவது
வழக்கம்.    என் வீட்டு அம்மாளின் மகள்,      ஒரு நாள் என்னை
வெண்ட்னரைச் சுற்றியுள்ள       அழகான மலைகளுக்கு அழைத்துச்
சென்றாள். நானே வேகமாக நடப்பவன் ; அப்பெண்ணோ என்னையும்
விட வேகமாக      நடந்தாள்.    அவளுக்குப்   பின்னால் என்னை
இழுத்துக்கொண்டு போனாள் என்றே  சொல்லலாம்.    வழியெல்லாம்
ஏதேதோ பேசிக்கொண்டே போனாள்.அவளுடைய ஓயாத பேச்சுக்குச்
சில சமயம்,    ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று  மாத்திரம் மெல்லிய
தொனியில் பதில் சொல்லுவேன். அதிகமாக நான் பேசினால்,   ‘ஆம்
எவ்வளவு அழகாயிருக்கிறது!’   என்பேன்.  அவள்   பறவை போல்
பறந்து கொண்டிருந்தாள்.  நானோ, எப்பொழுது     வீடு   திரும்பப்
போகிறோம்?   என்று  திகைத்துக்   கொண்டிருந்தேன்.   இவ்வாறு
மலையின்     உச்சிக்குப் போய்விட்டோம்.   திரும்ப எப்படிக் கீழே
இறங்குவது என்பதே பிரச்னை.குதி உயர்வான பூட்ஸ் போட்டிருந்தும்,
இருபத்தைந்து வயதுள்ள   சுறுசுறுப்பான  அப்பெண்,  அம்புபோலப்
பாய்ந்து  குன்றிலிருந்து  இறங்கி விட்டாள்.   கீழே  நின்றுகொண்டு
சிரித்தாள்; இறங்கி வரும்படி என்னை உற்சாகப்படுத்தினாள்; ‘ வந்து
இழுத்து வரட்டுமா?’    என்றும்   கேட்டாள்.  நான்    அவ்வளவு
கோழையாக இருப்பது எப்படி?     எவ்வளவோ கஷ்டத்துடன், சில
சமயம் ஊர்ந்தும்கூட, எப்படியோ   கீழே போய்ச் சேர்ந்துவிட்டேன்.
சபாஷ் என்று அவள் உரக்கச் சிரித்தாள். அவளால் முடிந்தவரையில்
நான் அதிக வெட்கப்படும்படி செய்துவிட்டாள்.

     ஆனால், நான் தீங்குறாமல்    எங்குமே   தப்பிவிட முடியாது.
ஏனெனில், புரையோடும் பொய்ம்மைப்     புண்ணிலிருந்து என்னைக்
காக்க கடவுள் திருவுளம் கொண்டார்.     வெண்ட்னரைப் போல நீர்
நிலையத்தை  அடுத்த  மற்றோர்   ஊரான        பிரைட்டனுக்குப்
போயிருந்தேன். அது நான் வெண்ட்னருக்குப் போவதற்கு  முன்னால்,
அங்கே ஒரு    ஹோட்டலில்    சாதாரண வசதிகளுடைய ஒரு கிழ
விதவையைச் சந்தித்தேன். என் இங்கிலாந்து வாசத்தின் முதலாண்டில்
நடந்தது இது. ஹோட்டலில் சாப்பாட்டுக்குப் பரிமாற இருக்கும் உணவு
வகைகளைக்    குறிக்கும்   பட்டியல்        பிரெஞ்சு  மொழியில்
எழுதப்பட்டிருந்ததால்     எனக்குப்       புரியவில்லை. அக்கிழவி
உட்கார்ந்திருந்த   மேஜையிலேயே நானும் உட்கார்ந்திருந்தேன். நான்
அந்த இடத்திற்குப் புதியவன்,    ஆகையால் விழிக்கிறேன் என்பதை
அம்மூதாட்டி கண்டு கொண்டார்.   எனக்கு   உதவி செய்யவும் முன்
வந்தார்.  “ நீர்   இவ்விடத்திற்குப்   புதியவர் என்று தோன்றுகிறது.
இன்னது வேண்டும் என்று ஏன் கேட்காமல்