பக்கம் எண் :

பொய்ம்மை ரணம்79

Untitled Document
இருக்கிறீர்?” என்று கேட்டார்.   அப்பட்டியலை   எழுத்துக்  கூட்டிப்
படித்து, அதில் கண்டவைகளில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன
என்று   பரிசாரகரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நான் தயார் ஆகிக்
கொண்டிருந்த     சமயத்தில் அந்த நல்ல மூதாட்டி,  மேற்கண்டவாறு
குறுக்கிட்டார். நான் அவருக்கு      நன்றி  செலுத்தினேன்.  எனக்கு
இருந்த     கஷ்டத்தையும் விளக்கினேன்: “பிரெஞ்சு மொழி எனக்குத்
தெரியாததனால்   பரிமாறப் படுவதில்   எது  மாமிசக் கலப்பில்லாதது
என்று எனக்கு விளங்கவில்லை” என்றேன்.

     “நான் உமக்கு    உதவி செய்கிறேன்.   அப்பட்டியலை உமக்கு
விளக்கிக் கூறி, நீர் எதைச் சாப்பிடலாம்  என்பதையும் காட்டுகிறேன்”
என்றார்,  அம்மூதாட்டி   வந்தனத்துடன்    அவர்      உதவியைப்
பயன்படுத்திக்  கொண்டேன்.  எங்களுக்குள் ஏற்பட்ட   பழக்கத்தின்
ஆரம்பம்   இது.  பின்னர்   இது    நட்பாக     வளர்ந்தது. நான்
இங்கிலாந்தில் இருந்த வரையிலும், அதற்குப் பிறகு    நீண்டகாலமும்
கூட, இந்த நட்பு தொடர்ந்து இருந்து வந்தது. அவர் தமது   லண்டன்
விலாசத்தை எனக்குத்      கொடுத்ததோடு   ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமையும் இரவில் தம் வீட்டுக்குச் சாப்பிட வருமாறும்  அழைத்தார்.
விசேஷ   சந்தர்ப்பங்களிலும்   அவர் என்னை   அழைப்பார். என்
கூச்சத்தைப் போக்கிக் கொள்ள உதவி செய்வார். இளம்  பெண்களை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் நான் பேசும்படியும்
செய்வார். இவ்விதம் பேசுவதில் ஈடுபட்ட பெண்களில்   முக்கியமாகக்
குறிப்பிட வேண்டியவள், அம் மூதாட்டியின் வீட்டிலேயே     வசித்து
வந்த ஒருத்தியாவாள்.   அடிக்கடி நாங்கள் இருவர் மட்டும்  தனியாக
இருக்கும்படியும் விடப் படுவோம்.

     இவையெல்லாம் முதலில் எனக்கும்   பெரும்   சங்கடமாகவே
இருந்தன.   பேச்சை முதலில்   தொடங்க      என்னால் முடியாது.
விகடமாகப்   பேசி,  நகைப்பை உண்டாக்கவும்   என்னால் ஆகாது.
ஆனால், அப்பெண் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்.   நானும் கற்றுக்
கொள்ள   ஆரம்பித்தேன்.  நாளாக     ஆக,  ‘ ஞாயிற்றுக்கிழமை
எப்பொழுது வரும்?’ என்று ஆவலுடன் எதிர் பார்க்கலானேன்.அந்த
இளம்   பெண்ணுடன்      பேசிக்கொண்டிருப்பதையும்   விரும்பத்
தலைப் பட்டேன்.

     அம்மூதாட்டி நாளுக்கு நாள்  தமது     வலையை விரிவாகப்
பரப்பிக் கொண்டே போனார்.    எங்கள்  சந்திப்பில் அவர் அதிகச்
சிரத்தை கொள்ளலானார். எங்கள் இருவரைக் குறித்தும் அவருடைய
சொந்தத் திட்டம் ஏதாவது இருந்திருக்கக் கூடும்.

     என் நிலைமை அதிகச் சங்கடமானதாயிற்று. ‘எனக்கு மணமாகி
விட்டது  என்பதை   முன்னாலேயே  அந்த    நல்ல மூதாட்டிக்குத்
தெரிவித்திருக்கக்    கூடாதா?’     என்று எனக்கு நானே சொல்லிக்