பக்கம் எண் :

82சத்திய சோதனை

Untitled Document
சம்ஸ்கிருதத்திலோ,  குஜராத்தியிலோ  நான்  படித்ததில்லையாகையால்
எனக்கு வெட்கமாகி விட்டது.    நான் கீதையைப்  படித்ததேயில்லை.
ஆனாலும், அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன்  அதைப் படிப்பேன்
என்பதை நான்     அவர்களிடம்   சொல்லியாக   வேண்டியதாயிற்று.
சமஸ்கிருதத்தில்    எனக்கு      இருந்த ஞானம் சொற்பமேயாயினும்,
மொழிபெயர்ப்பு    எந்த இடத்தில்     அதன் பொருளைச் சரியாகக்
கொண்டுவரத் தவறியிருக்கிறது என்பதைக் கூறும் அளவுக்கு மூலநூல்
எனக்கு விளங்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன். அவர்களோடு
சேர்ந்து கீதையைப்   படிக்க ஆரம்பித்தேன்.   அதன்  இரண்டாவது
அத்தியாயத்தில் காணும் சில சுலோகங்களின் கருத்து இது:

இந்திரிய விசயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு
அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது;
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது,
ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது.
குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது;
குழப்பத்திலிருந்து நினைவின்மையும்,
நினைவின்மையிலிருந்து புத்தி நாசமும் உண்டாகின்றன;
புத்தி நாசத்தினால் மனிதன் அழிந்துபோகிறான்.

     இந்தச்   சுலோகங்கள்    என் மனத்தில்    ஆழப் பதிந்தன.
அவைஇன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.அந்நூல்
விலை மதிப்பைக் கடந்த மாணிக்கமாக       எனக்குத் தோன்றியது.
அதிலிருந்து இந்தக் கருத்து எனக்கு  வலுப்பட்டுக்கொண்டே வந்தது.
இதன் பலனாக, சத்தியமான   ஞானத்தைப் போதிக்கும் மிகச் சிறந்த
நூல்      இது என்று நான்   எண்ணி வருகிறேன்.  எனக்கு  மனச்
சஞ்சலங்கள் ஏற்படும் சமயங்களில் இந்நூல் மதித்தற்கரிய  உதவியாக
இருந்திருக்கிறது.          அநேகமாகக்   கீதையின்      ஆங்கில
மொழிபெயர்ப்புக்கள்      எல்லாவற்றையும்      படித்திருக்கிறேன்.
அவற்றிற்கெல்லாம் ஸர் எட்வின் அர்னால்டின்     மொழிபெயர்ப்பே
மிகச் சிறந்தது   என்று நான் கருதுகிறேன்.   மூலத்தின் கருத்து ஒரு
சிறிதும் மாறுபடாத வகையில் அவர் மொழி பெயர்த்திருக்கிறார்; அது
மொழிபெயர்ப்பாகவே தோன்றவில்லை. இந்த நண்பர்களுடன் சேர்ந்து,
அப்பொழுது கீதையை நான் படித்த போதிலும் அதைத் தீரக்கற்றேன்
என்று நான் பாசாங்கு செய்வதற்கில்லை.     சில ஆண்டுகள் சென்ற
பின்னரே நான் தினந்தோறும் கீதையைப் படிக்கலானேன்.

     ஸர் எட்வின் அர்னால்டு எழுதிய, ‘ஆசியாவின் ஜோதி’ என்ற
நூலையும் படிக்கும்படி அச்சகோதரர்கள் என்னிடம் கூறினர். பகவத்
கீதையின்  மொழிபெயர்ப்பாளர் என்று மாத்திரமே ஸர் அர்னால்டை
அதுவரையில் எனக்குத் தெரியும்.பகவத்