பக்கம் எண் :

‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை87

Untitled Document
     மகாநாட்டிலிருந்து      மாலையில்    திரும்பினோம். இரவுச்
சாப்பாட்டிற்குப்       பிறகு    ரப்பர் பிரிட்ஜ்    என்ற ஒருவிதச்
சீட்டாட்டம் ஆட   உட்கார்ந்தோம். அவ்வீட்டுக்கார   அம்மாளும்
எங்களுடன் சீட்டாடினார். இப்படி வீட்டுக்கார அம்மாளும் சேர்ந்து
சீட்டாடுவதுஇங்கிலாந்தில் கௌவரமான குடும்பங்களிலும் வழக்கம்.
ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் ஒவ்வொருவரும், குற்றமற்ற வகையில்
கேலியாகப்   பேசுவது சாதாரணமானது.  ஆனால்,   இங்கோ என்
சகாக்களும் அவ்வீட்டு அம்மாளும் ஆபாசமான    பேச்சுக்களைப்
பேச ஆரம்பித்தார்கள். என் நண்பர், அக் கலையில் கைதேர்ந்தவர்
என்பது எனக்குத் தெரியாது. அது என்னையும்   பிடித்துக்கொண்டு
விட்டது; நானும் அவ்விதப் பேச்சுக்களில்     கலந்து கொண்டேன்.
சீட்டையும்    சீட்டாட்டத்தையும் விட்டுவிட்டு,   எல்லை மீறி நான்
போய்விட   இருந்த சமயத்தில் அந்த நல்ல சகாவின்மூலம் கடவுள்
எனக்குத் தெய்வீகமான        எச்சரிக்கையைச் செய்தார்: ‘தம்பி!
உன்னுள்  இந்தப் பிசாசு எங்கிருந்து வந்து     புகுந்தது? எழுந்து
போய்விடு, சீக்கிரம்’ என்று அவர் சொன்னதே அந்த  எச்சரிக்கை.

     நான் வெட்கம் அடைந்தேன்.    எச்சரிக்கைப்படி நடந்தேன்.
நண்பருக்கும்    என்னுள்ளே    நன்றியறிதலைத்    தெரிவித்துக்
கொண்டேன்.     என்    அன்னையின்     முன்னிலையில் நான்
மேற்கொண்டிருந்த      விரதத்தை      நினைவுபடுத்திக்கொண்டு,
அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டேன்.   தடுமாறிக்கொண்டே, நடுங்கிக்
கொண்டே என் அறைக்குச் சென்றேன்.      துரத்திய வேடனிடம்
இருந்து தப்பிய மிருகம் போல் என் இருதயம் துடிதுடித்தது.

     என் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்,   என் மனத்தில்
காம இச்சையைத் தூண்டிவிட்டது    இதுவே முதல் தடவை என்று
நினைக்கிறேன்.   அன்று  இரவெல்லாம்    எனக்குத்    தூக்கமே
வரவில்லை. என்ன என்னவோ       எண்ணங்களெல்லாம் எனக்கு
உண்டாயின. ‘அந்த வீட்டிலிருந்தே போய்விடுவதா? அந்த இடத்தை
விட்டே ஓடிவிடுவதா? நான்      செய்தது என்ன? கொஞ்சம் புத்தி
கெட்டுப்போயிருந்தால்      என் கதி என்ன ஆகியிருக்கும்?’ இனி
மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுவதென்ற முடிவைச்செய்து
கொண்டேன். அவ்வீட்டைவிட்டுப் போய்விடுவது மாத்திரம் அல்ல ;
எப்படியாவது   அவ்வூரை    விட்டே     போய்விடுவது என்றும்
தீர்மானித்தேன். மகாநாடு இரண்டு நாட்களே நடந்தது. அடுத்த நாள்
மாலையே     போர்ட்ஸ்மவுத்திலிருந்து   நான் புறப்பட்டுவிட்டதாக
ஞாபகம். என் நண்பர் மாத்திரம் சில நாட்கள் அங்கே   தங்கினார்.

     சமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ,   அவர்
நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ