பக்கம் எண் :

92சத்திய சோதனை

Untitled Document
     அவரோ மிகப் பெரிய மனிதர்.அப்படியிருக்க அவரை எப்படிப்
பார்க்க முடியும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?” என்றேன்.

     “ஏன் பார்க்க முடியாது? எப்படிப் பார்ப்பது என்பது எனக்குத்
தெரியும். எனக்காக      என் பெயரில்    அவருக்கு நீங்கள் எழுத
வேண்டும். நான் ஒரு நூலாசிரியர் என்றும், அவருடைய ஜீவகாருண்ய
சேவைகளுக்காக அவரை       நேரில் கண்டு       வாழ்த்துக்கூற
விரும்புகிறேன்      என்று எழுதுங்கள்.   எனக்கு      ஆங்கிலம்
தெரியாததனால் எனக்கு  மொழிபெயர்ப்பாளராக உங்களையும் உடன்
அழைத்து    வரவேண்டியிருக்கிறது என்றும் எழுதுங்கள்” என்றார்.

     அப்படியே நான் கடிதம் எழுதினேன்.    இரண்டு     மூன்று
நாட்களில் நாங்கள் சந்திப்பதற்கு நேரத்தைக் குறிப்பிட்டு,  கார்டினல்,
மானிங்கிடமிருந்து கடிதம்      வந்தது. ஆகவே, நாங்கள் இருவரும்
கார்டினலிடம் போனோம்.      யாரையாவது பார்க்கப் போகும்போது
உடுத்துக்கொள்ளும்    சம்பிரதாய உடையை அணிந்துகொண்டு நான்
போனேன். ஆனால், நாராயண ஹேமசந்திரரோ,  எப்பொழுதும்போல்
அதே சட்டையையும்   கால் சட்டையையும்,    போட்டுக் கொண்டே
வந்தார். இதை குறித்து நான்  கேலிசெய்த போதுஅவர் கூறியதாவது:

     “நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள்.   மகான்கள்,
ஒருவருடைய       வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை.
அவருடைய உள்ளத்தைப்பற்றியே      அவர்கள் நினைக்கிறார்கள்.”

     காட்டினலின்     மாளிகைக்குள் சென்றோம்.   நாங்கள் போய்
உட்கார்ந்ததும்,    மெலிந்த, உயரமான கிழக் கனவான் ஒருவர் வந்து,
எங்களுடன் கை குலுக்கினார். நாராயண ஹேமசந்திரர் பின் வருமாறு
தமது வாழ்த்தைக் கூறினார்:    “உங்கள் நேரத்தை அதிகம் வீணாக்க
நான் விரும்பவில்லை.     உங்கள் பெருமையைக்      குறித்து நான்
எவ்வளவோ         கேள்விப்பட்டிருக்கிறேன்.    வேலை நிறுத்தம்
செய்திருந்தவர்களுக்கு நீங்கள் செய்த சிறந்த சேவைக்காக உங்களிடம்
வந்து, நன்றி     தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
உலகத்திலுள்ள       மகான்களையெல்லாம் தரிசிப்பது என் வழக்கம்.
இதனாலேயே          தங்களுக்கு நான்    இந்தத்  தொந்தரவைக்
கொடுத்துவிட்டேன்.”

     குஜராத்தியில்    அவர் சொன்னதை    நான் மேற்கண்டவாறு
மொழிபெயர்த்துச் சொன்னேன்.

     “நீங்கள் வந்ததற்காக நான்     அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.
லண்டன்      வாழ்க்கை உங்களுக்கு    ஒத்துக்கொள்ளும் என்றும்,
இங்குள்ள மக்களுடன் நீங்கள்   பழகுவீர்கள் என்றும்  நம்புகிறேன்.
ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவானாக”    என்றார், கார்டினல்.

     இவ்வாறு கூறிவிட்டுக் கார்டினல் எழுந்து    நின்று எங்களுக்கு