பக்கம் எண் :

96சத்திய சோதனை

Untitled Document
வரையில்,      பொம்மைகள் நமக்குக்   கவர்ச்சியாகவே இருக்கும்.
விளையாட்டுப் பொருட்களைக்கண்டு மயங்கும்   குழந்தைகளே நாம்
எல்லோரும் என்ற உண்மையை     அக்கோபுரம் நன்றாக எடுத்துக்
காட்டுவதாக இருந்தது. அதுவே    எப்பீல் கோபுரத்தினால் ஏற்பட்ட
பயன் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

24. பாரிஸ்டரானேன். ஆனால் பிறகு.....?

     பாரிஸ்டர் ஆவதற்காகவே  நான் இங்கிலாந்துக்குச் சென்றேன்.
ஆனால்,     அதைப்பற்றி     இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே
தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல
வேண்டிய சமயம் வந்துவிட்டது.

     ஒரு மாணவன்,   பாரிஸ்டர் ஆவதற்குப்      பூர்த்தி செய்ய
வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, ‘ முறையை
அனுசரிப்பது’ இத்தகைய பன்னிரெண்டு     முறைகள் சுமார் மூன்று
ஆண்டுகளுக்குச்  சமம்.  மற்றொன்று,  ‘ பரீட்சைகளில் தேறுவது ’.
‘முறையை அனுசரிப்பது’ என்றால்,    முறைப்படி தின்பது; அதாவது
ஒரு கால அளவில்  நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில்
குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும்.   விருந்தில்
கலந்து கொள்ளுவதென்றால், சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல.
குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு,  விருந்து
முடியும்வரை       அங்கேயே   இருக்க வேண்டும்.  உண்மையில்
ஒவ்வொருவரும்    சாப்பிட்டார்கள் ;  குடித்தார்கள்.  நல்ல உணவு
வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும்.  ஒரு
சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து    மூன்றரை ஷில்லிங்
வரையில் ஆகும்: அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர்
ஹோட்டலில் சாப்பிட்டால்     மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு
தொகை கொடுக்க வேண்டி வரும்.    ஆகையால்,  இது மிதமானது
என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையைவிட மதுபானச் செலவு
அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள   நமக்கு - நாம்  ‘நாகரிகம்’
அடையாதவர்களாக இருந்தால் -   ஆச்சரியமாக இருக்கும்.  முதன்
முதலாக  எனக்கு   இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே
போனேன்.   குடியில் இவ்வளவு      பணத்தை வாரி இறைத்துவிட
அவர்களுக்கு     எப்படித்தான்     மனசு வருகிறது       என்று
ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த
விருந்துகளில்       அநேகமாக நான்   எதுவும் சாப்பிடுவதில்லை.
ஏனென்றால்,   நான் சாப்பிடக்கூடியவை ரொட்டியும்  வேக வைத்த
உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே.    இவையும் எனக்குப்
பிடிப்பதில்லையாகையால்       ஆரம்பத்தில் இவைகளையும் நான்
சாப்பிடுவதில்லை. பின்னால்