பக்கம் எண் :

பாரிஸ்டரானேன். ஆனால் பிறகு..... 97

Untitled Document
இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும்,    வேறு பண்டங்களும்
வேண்டும் என்று கேட்கும்      துணிச்சலும்  எனக்கு உண்டாயிற்று.

     மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட,  நீதிபதிகளுக்கு
அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும்.   என்னைப்போல
ஒரு பார்ஸி மாணவரும்     மாமிசம் சாப்பிடாதவர்.  நீதிபதிகளுக்குப்
பரிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும்  பரிமாற வேண்டும்
என்று நாங்கள் இருவரும் மனுச் செய்து கொண்டோம்.   எங்கள் மனு
அங்கீகரிக்கப் பெற்றது,   நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும்
மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.

     நான்கு பேர்    அடங்கிய  ஒரு குழுவிற்கு,  இரண்டு பாட்டில்
‘ஒயின்’ என்ற வகையில்     மதுபானம் கொடுத்தனர்.  நான் அதைத்
தொடுவதே இல்லை. ஆகையால்,என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கு
இரண்டு ‘ஒயின்’       பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது.
இதற்காக என்னைத் தத்தம் குழுவில்    சேர்த்துக் கொள்ளுவதற்குப்
பலர்  விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது.
ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த    நிகழ்ச்சியில் ‘பெரிய விருந்து’
என்று ஒன்று நடக்கும்.   ‘போர்ட்’, ‘ஷெர்ரி’ ஒயின்களும் அதிகமாக,
‘ஷாம்பேன்’ போன்ற    ஒயின்களும் கொடுக்கப்படும்.  ஆகையால்,
அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள்   வரும். அந்தப்
பெரிய விருந்து நாட்களில்     எனக்குக் கிராக்கி    வெகு அதிகம்
இருக்கும்.

     இத்தகைய விருந்துகள்,    பாரிஸ்டராவதற்கு    மாணவர்களை
எவ்விதம்        தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான்
அப்பொழுதும் உணரவில்லை ;   அதற்குப் பின்னரும் உணரவில்லை.
மிகச் சில மாணவரே இத்தகைய     விருந்துகளில் கலந்துகொள்ளும்
காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும்
கலந்து பேசுவதற்குச்      சந்தர்ப்பங்கள் இருந்தன ; பிரசங்கங்களும்
நடந்தன.     இத்தகைய சந்தர்ப்பங்களினால்    அவர்களுக்கு உலக
ஞானத்துடன், ஒருவகையான மெருகும்   நாகரிகமும் உண்டாவதற்கும்
வசதி இருந்தது; பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளமுடியும். என்
காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து  மேஜைகள்
போடப்பட்டிருந்ததால்      அத்தகைய வாய்ப்பு என்றுமே  எனக்குக்
கிடைக்கவில்லை.     இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள்
இல்லாமலே     போயிற்று. என்றாலும், பழைமையில் பற்றுக் கொண்ட
இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.

     பரீட்சைக்கு   உரிய பாடங்கள்       மிகச்    சுலபமானவை.
பாரிஸ்டர்களை,   ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்றும்   வேடிக்கையாக
அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும்