பக்கம் எண் :

98சத்திய சோதனை

Untitled Document
இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும்.என் காலத்தில் ரோமன்
சட்டப் பரீட்சை, பொதுச் சட்டப் பரீட்சை என்ற    இரு பரீட்சைகள்
உண்டு.   இவற்றிற்கு இன்னவை        பாடப் புத்தகங்கள் என்றும்
குறிப்பிடப்பட்டிருந்தன.         தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை
எழுதலாம். அப்பாடப் புத்தகங்களை யாரும்    அநேகமாக படிப்பதே
இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும்
குறிப்புக்களை மாத்திரம்       மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு,
ரோமன்    சட்டப் பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன்.
அதேபோலப்      பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புக்களை மாத்திரம்
இரண்டு மூன்று  மாதங்களில் படித்து விட்டு, அப்பரீட்சையிலும் தேறி
விடுவார்கள்.   கேள்விகள் சுலபமானவை ;  மாணவர்கள் அளிக்கும்
பதில்களுக்கு       மார்க் கொடுப்பவர்களும்    தாராளமாக நடந்து
கொண்டார்கள்.     ரோமன் சட்டப்   பரீட்சைக்குச் செல்பவர்களில்
100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர்.முடிவான பரீட்சையிலும்
100-க்கு 75 அல்லது       அதற்கு அதிகமானவர்கள்  கூடத் தேறி
விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல்  போய்விடுவோமோ
என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல,
நான்கு முறைகள் நடந்தன!    இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும்
நினைப்பதற்கில்லை.

     ஆனால், நான் மாத்திரம்      அவற்றைச் சிரமமானவையாகச்
செய்துகொண்டு விட்டேன்.     பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும்
படிக்க வேண்டும் என்று கருதினேன்.     அவைகளைப் படிக்காமல்
இருந்துவிடுவது     ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை
வாங்குவதில் அதிகப் பணமும் செலவிட்டேன்.   ரோமன் சட்டத்தை,
லத்தீன்    மொழியிலேயே படிப்பது என்று தீர்மானித்தேன். லண்டன்
மெட்ரிகுலேஷன் பரீட்சைக்காக     நான் லத்தீன் படித்தது எனக்கு
உதவியாக      இருந்தது.    நான் இவ்விதம்     படித்ததெல்லாம்,
தென்னாப்பிரிக்காவில் ரோமன் டச்சு பொதுச் சட்டமாக  இருந்ததால்
அந்நாட்டில்      இருந்தபோது,   எனக்கு நன்மையை   அளித்தது.
ஜஸ்டினியனைப்  படித்தது,   தென்னாப்பிரிக்காவின்  சட்டங்களைப்
புரிந்துகொள்ளுவதில்    எனக்கு       அதிக உதவியாக இருந்தது.

     இங்கிலாந்தின்    பொதுச் சட்டங்களை   நான் கஷ்டப்பட்டுப்
படித்து முடிக்க     ஒன்பது மாத காலம் ஆயிற்று.   புரூம் எழுதிய
‘பொதுச் சட்டம்’ என்ற     நூல்   பெரியதாயினும் சுவாரஸ்யமானது.
அதைப்     படித்து முடிக்க அதிகக் காலம் ஆகிவிட்டது.  ஸ்னெல்
எழுதிய ‘ஈக்விடி’ என்ற    நூல் சிறந்த விஷயங்களைக் கொண்டது.
ஆனால்,     புரிந்து கொள்ளுவதுதான் சிரமம்.   ஒயிட்டும் டூடரும்
எழுதிய,    ‘முக்கியமான வழக்குகள்’          என்ற நூலில், சில