பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்117

சிற்பங்களைக் கொண்ட தூண்கள் பல உள்ளன. இராமாயண
வரலாற்றில் வரும் இராமர், சீதை, இலக்குமணர், அனுமன்,
சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷணர் பட்டாபிஷேகம்
ஆகிய
பெயர்களைக்கொண்ட கற்றூண் உருவங்கள், இரங்கநாதர்,
ஆண்டாள், வேணுகோபாலன் திரிவிக்ரமன், மன்மதன்,
ரதி
ஆகியோரது உருவச்சிற்பங்கள் ஆகியவை யாவும் சிறந்த
கலைப்படைப்புகள் ஆகும். இவை காண்போர் யாவரையும்
வியப்பால் ஆழ்த்தும். இவை தஞ்சை நாயக்க அரசின்
அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் அமைக்கப்பட்டன.

மகா மண்டபச் சிற்பங்களைத் தவிர இக்கோவிலின்
மற்றொரு கலைச்சிறப்பு, இங்குள்ள இராமாயண ஓவியங்களாகும்.
கோவில் உட்பிரகாரத்தின் சுவர்களில், இராமாயணக் கதை
முழுவதும் அழகிய வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
‘நவராத்திரி விழா’ இக்கோவிலில் நடைபெறும் முக்கிய
திருவிழாவாகும்.

கும்பகோணம் நகரில் மகாமக குளம் ஒன்று உள்ளது.
இக்குளத்தின் நான்கு பக்கங்களிலும் 16 மண்டபங்கள் உள்ளன.
இவை தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா
நடைபெறுகிறது. கும்பேஸ்வர சுவாமியின் நினைவாக
இவ்விழா கொண்டாடப்படுகிறது. அது சமயம் மகாமகக்
குளத்தில் நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. சமீபத்தில்
1980, மார்ச் 1 ஆம் தேதி மகாமக விழா மிகச் சிறப்புடன்
நடைபெற்றது.

ஐராவதேஸ்வரர் கோவில்

கும்பகோணம் நகருக்கு அருகில் தாராசுரம் என்ற இடம்
உள்ளது. இங்கு ஐராவதேஸ்வரர் என்ற கோவில் உள்ளது.
பிற்காலச் சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜன்
(1150-1173) இக்கோவிலை எழுப்பினார். இம்மன்னர் பெயரால்
இக்கோவில் இராஜராஜேச்சுரம் என அழைக்கப்படலாயிற்று.
மூன்றாம்