பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்123

12. நாகப்பட்டினம்

மிழ்நாட்டில் வங்காள விரிகுடாக் கரையில் நாகப்பட்டினம் என்ற
துறைமுக நகர் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.
நாகப்பட்டினம் பௌத்த சமயத்தினருக்கு ஒரு முக்கிய மையமாக நீண்ட
காலமாக இருந்து வந்துள்ளது. இராஜராஜசோழன்(கி.பி.985-1014)
ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரம்
எழுப்பப்பட்டது. ஸ்ரீவிஜயத்தின் மாற விஜயோ துங்கவர்மன் தன்
தந்தை சூடாமணிவர்மன் நினைவாக இதை எழுப்பினார். மகாயான
பிரிவைச் சேர்ந்த
பௌத்தர்கள் ஸ்ரீவிஜயத்திலிருந்து
நாகப்பட்டினத்திற்கு வந்து இங்குத் தங்கி வாழ்ந்தனர். இப்பௌத்த
பள்ளிக்காக ‘ஆனைமங்கலம்’ என்ற ஊரில் ஏராளமான நிலங்களை
வரி நீக்கி இராஜராஜன் அளித்தார். முதலாம் இராஜேந்திர சோழன்
ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் ‘இராஜேந்திர சோழ
பெரும்பள்ளி ’ தோற்றுவிக்கப்பட்டது. எனவே, கி.பி.11 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய இரு பௌத்தப் பள்ளிகளும்
நாகப்பட்டினத்தில் சிறந்து விளங்கின. கி.பி.15ஆம் நூற்றாண்டில்கூட
நாகப்பட்டினம் பௌத்த சமயத்தினருக்கு முக்கிய மையமாக
விளங்கியது என்று கல்யாணி கல்வெட்டுகள் (கி.பி. 1476) மூலம்
அறியப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் பெகுவிலிருந்து (பர்மா) பௌத்த
சமயக்குருக்கள் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்ததைக்
குறிப்பிடுகின்றன. கி.பி. 1926 இல் நாகப்பட்டினத்தில் அகழ்ந்து
காணப்பட்ட ஏராளமான புத்தரது வெண்கலச் சிலைகள், இந்நகர் ஒரு
காலத்தில் பௌத்த சமயத்தின் சிறந்த மையமாக விளங்கியதை
எடுத்துக்காட்டுகின்றன.

நாகப்பட்டினம் ஒரு துறைமுக நகரம் ஆகும். நிலக்கடலை,
வெங்காயம், புகையிலை ஆகியவை இத்துறைமுகத்தின் முக்கிய
ஏற்றுமதிப் பொருள்கள் ஆகும். கல்யாணிக் கல்வெட்டுகள் (கி.பி.
1476) பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற கப்பல்கள்
நாகப்பட்டினம் வந்து சென்றன என்று குறிப்பிடுவதிலிருந்து இதன்
துறைமுகச் சிறப்பினை அறியலாம். இந்நகரில்