பக்கம் எண் :

122தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சுவாமிமலை

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சுவாமிமலை
உள்ளது. இங்கு ‘சுவாமிநாதன்’ என அழைக்கப்படும்
சுப்ரமணியரின் கோவில் உள்ளது. சைவ சமயத்தினருக்கு
முக்கியமான தெய்வமான முருகனின் ‘ஆறுபடை வீடுகளில்’
சுவாமிமலையும் ஒன்றாகும். இது இந்துக்களின் புனிதப் பயணத்தலம்
ஆகும். இக்கோவில் மிகத் தொன்மையான ஒன்றாகும்.
முதலாம் பராந்தகச் சோழன்
இக்கோவிலை விரிவாகக்
கட்டினார் என்று கூறப்படுகிறது. அடிவாரத்தில் மீனாஷி-
சுந்தரேசர்
கோவில் உள்ளது. இது மதுரையை ஆண்ட
பாண்டிய மன்னன் வரகுணன் என்பவரால் கட்டப்பட்டதெனக்
கூறப்படுகிறது.

சுவாமிமலைக்கு அருகில் திருவலஞ்சுழியில்
‘கற்பக நாதேசுவரர்’ என்ற சிவனது ஆலயம் உள்ளது.
இங்குள்ள அம்மன் பெரியநாயகி எனப்படுகிறார். இங்குள்ள
விநாயகர் மண்டபம் சிற்ப வேலைப்பாடு மிக்கதாக உள்ளது.

நாச்சியார் கோவில்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலையில் நறையூர்
என்ற நாச்சியார் கோவில் என்ற இடம் உள்ளது. இங்கு
சீனிவாசகப் பெருமாளுக்குச்
சிறந்த வைணவ ஆலயம்
உள்ளது. கோச்செங்கணான் என்ற சோழ மன்னரால்
இக்கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவறையிலுள்ள
வாசுதேவன், பலராமன், பிரத்தியுமன், அனுருத்தன்,
நாச்சியார், பிரமா
ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள்
கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இக்கோவிலிலுள்ள கருடனின்
சிற்பம் வேலைப்பாடுமிக்கது. கோவிலின் முன்பகுதி
மண்டபத்திலுள்ள அழகிய பெரிய தூண்கள், நவீனகால
கட்டடக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.