அவரைப் பின்தொடர்ந்து செல்வதைக் குறிக்கும் சிற்பமும்
உள்ளது. 1963ஆம் ஆண்டில் இக்கோவிலின் சிறப்புமிக்க
குடமுழுக்கு விழா நடைபெற்றது.
“தஞ்சைச் சோழ மன்னர்களின் கோயிற்
கற்பணிகளில் திருப்புவனக் கோயில் ஒரு முக்கியமான
மைல் கல்.”
தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையை விளக்கும்
சின்னங்களில் திருப்புவனக் கோவில் ஒன்றாகும்.
திருப்புவனத்திற்கு அருகில்
திருவிடைமருதூரில்
மருதப்ப ஈஸ்வரர் என்ற சிவனது ஆலயம் உள்ளது.
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில்
ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இது ‘தட்சிண
திருப்பதி’ எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார்,
திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பெரியாழ்வார்
ஆகிய ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம் ஆகும்.
இக்கோவிலின் மூலவர் திருவிண்ணகரப்பன் என்றும்
உற்சவர் பொன்னப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலின் பெருமாள்
‘ஒப்பற்றவர்’ (ஒப்பார்-இல்-
அப்பர்) என்று நம்மாழ்வார் போற்றியுள்ளார்.
‘பிரமோத்சவம்’ இக்கோவிலில் நடைபெறும் முக்கிய
விழாவாகும்.
பட்டீஸ்வரம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒரு
முக்கியத் தலம் ஆகும். இங்குச் சிவன் தேனு புவி ஈஸ்வரராகக்
காட்சித் தருகிறார். தஞ்சை நாயக்க மன்னரது அமைச்சராக
விளங்கிய கோவிந்த தீட்சிதர் பட்டீஸ்வரத்தில்
வாழ்ந்தார்.
பட்டீஸ்வரத்தையடுத்த பகுதி பழையாறை எனப்படும். சோழ
மன்னர்கள் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு எழுச்சிப்
பெறுமுன், பழையாறையில் சிற்றரசர்களாய் வாழ்ந்தனர். இங்கு
சோமேசர் - லோகாம்பிகை கோவில் உள்ளது.
|