பக்கம் எண் :

120தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இவ்வாலயம் ஆரிய சிற்பக் வேலைப்பாடுகளைக்
கொண்டுள்ளது. இறைவனது கருவறை விமானம் தஞ்சைப்
பெரிய கோவிலையும், கங்கை கொண்ட சோழபுரக் கோவிலையும்
போன்ற அமைப்பைக்கொண்டு மிகவும் சிறப்புடன் திகழ்கின்றது.
வரகுண பாண்டியனுடைய நடுக்கம் தீர்க்கப்பட்ட காலத்தில்
(கி.பி.சுமார் 800) இக்கோயில் சிறிய அளவினதாக இருந்திருக்க
வேண்டும் என்றும், பிற்காலச் சோழர் மூன்றாம் குலோத்துங்கன்
இதனைப் பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தார் என்றும்
கூறப்படுகிறது. கருவறையில் எழுப்பப்பட்ட விமானம்
அதிட்டானம்முதல் ஸ்தூபிவரை முற்றிலும் கல்லாலானதாகும்.
தஞ்சை, கங்கை கொண்ட சோழபுர விமானங்களைப்போல்
இக்கோவிலின் விமானம் உயரமானதல்ல எனினும், அழகில்
குறைந்ததாகத் தோன்றவில்லை. தேவ கோஸ்டங்களில்
இறைவனது அழகிய பல திரு உருவங்கள் உள்ளன. ஆலத்தின்
கிழக்குச் சுவர்களில் இராமாயண நிகழ்ச்சிகள், மனுநீதிச் சோழன்
வரலாறு, இரணிய-நரசிம்ம யுத்தம், நாட்டிய மங்கைகள்,
யானைப் பிரசவம்
ஆகியவை அழகிய சிற்பங்களாகச்
சித்தரிக்கப் பட்டுள்ளன. அதிட்டானத்தின் அமைப்பு
போற்றும்படியாக உள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் அழகிய
வேலைப்பாடுகளுடன் கூடிய கற்றூண்கள் உள்ளன. வசந்த
மண்டபம்
ரதத்தின் அமைப்பைக்கொண்டு அழகுடன் காட்சி
தருகிறது. ‘சோமாஸ்கந்தர் மண்டபத்தின்’ தென்பகுதியில்
பரத நாட்டிய முத்திரைகளைக்
கொண்ட சிற்ப
வேலைப்பாடுகள் உள்ளன. இவ்வாலயத்தின் இறைவி
அறம் வளர்ந்த நாயகி
எனப்படுகிறார். இவ்வாலயத்திலுள்ள
சரபேசர்
சந்நிதி புகழ் பெற்றதாகும். இரணியனை வென்ற
நரசிம்மர் உலகை அழிக்கத் தொடங்கினார் என்றும், பாதி
சிங்க உருவத்தையும் பாதி பறவை உருவத்தையும் கொண்ட
சரபமூர்த்தி
நரசிம்மரைச் சாந்தமடையச் செய்தார் என்றும்
புராண வாயிலாக அறியப்படுகிறது.

ஆலயத்தின் நுழைவாயிலின் ஒரு புறத்தில் சுந்தரர்
வெள்ளை யானைமீது கைலாய மலைக்குச் செல்வதைக்
குறிக்கும் சிற்பமும் வாயிலின் மற்றோரு புறத்தில் சேரமான்
பெருமாள் குதிரையில்