பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்127

தாக்கப்பட்டனர். இரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கப்பட்ட
பின்னும் கையில் பிடித்த உப்பைக் கீழே போடாது, அகிம்சை
முறையில் போராடிய வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகப்
போராட்ட வீரர்களின் சாதனை இந்தியச் சுதந்தரப் போராட்ட
வரலாற்றில் பெருமைமிக்க சம்பவமாகும். 1930இல் உப்புக்
காய்ச்சப்பட்டதன் நினைவாக ஒரு அழகிய தூபி
வேதாரண்யத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் ஒரு புகழ்மிக்க சிவாலயம் உள்ளது.
சிவன் பார்வதியைக் கைலாயத்தில் மணந்த திருக்காட்சி
அகஸ்தியருக்கு வேதாரண்யத்தில் தரப்பட்டது என்பது புராணம்
கூறும் செய்தியாகும். வேதாரண்யத்திலுள்ள சிவாலயத்தின்
இறைவன் வேதநாயகன் என்றும், இறைவி வேதநாயகி
என்றும் அழைக்கப்படுகிறார்.

வேதாரண்யத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் கோடிக்கரை
என்ற இடம் உள்ளது. இங்கு வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது.
பிளமிங்கோ என்ற அழகுப் பறவைகளின் கூட்டங்களை
இங்குக் காணலாம். 20,000 முதல் 30,000 பிளமிங்கோ பறவைகள்
இங்குக் கூடுகின்றன.