பக்கம் எண் :

128தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

13. திருவாரூர்

திருவாரூர் தஞ்சை மாவட்டத்திலுள்ள முக்கிய நகரம்
ஆகும். (தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ.) திருவாரூரின் புகழுக்குக்
காரணம் இங்குள்ள தியாகராஜ சுவாமி கோவில் ஆகும்.
இது தமிழ்நாட்டிலுள்ள பழம் பெருங்கோவில்களில் ஒன்றாகும்.
ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய சமயாச்சாரியார்களின்
பாடலைப் பெற்ற சிவத்தலமாகும்.

தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் நிறுவுவதற்கு முன்பாகவே
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் புகழ்பெற்று விளங்கியது.
தஞ்சைச் சோழர்களின் திருப்பணிகள் இங்கு மிகுதியாக உள்ளன.
குறிப்பாகச் செம்பியன் மாதேவி, முதலாம் இராஜேந்திரன்,
அவருடன் உறவு கொண்டிருந்த நங்கைப் பரவை என்ற
தேவரடியாளின் திருப்பணிகள் பெருமைக்குரியன,

வான்மீக நாதர் சந்நிதி, தியாகராஜசுவாமி சந்நிதி,
அசலேசுவரர் சந்நிதி,
ஆகிய இம்மூன்று சந்நிதிகளும்,
கோவிலின் ஆதிப்பகுதிகள் ஆகும். தியாகராஜ சுவாமியின்
திருவுருவம், மரகதலிங்கம் ஆகியவற்றை முசுகுந்தன் என்ற
சோழ மன்னன் இந்திரனிடமிருந்து பெற்று இங்குக் கோவில்
அமைத்ததாகப் புராணம் கூறும். திருவாரூர்ப் புராண வரலாறு
மிகப் பழமையானதாகும். கோவிலின் மத்தியில் வான்மீக நாதர்
சந்நிதியும், தியாகராஜ சுவாமி சந்நிதியும் உள்ளன. இந்த இரண்டு
சந்நிதிகளும் ஒரே முக மண்டபம் உள்ளது. வான்மீகநாதர்
புற்றிடம் கொண்டார் எனவும் அழைக்கப்படுகிறார். சந்நிதியிலுள்ள
லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இரண்டாம் பிரகாரத்தின்
தென்கிழக்கு மூலையில் அசலேசுவரர் சந்நிதி உள்ளது.
இக்கோவிலில் நீலோத் பாலம்மாள், கமலாம்பாள் என இரு
அம்மன் சந்நிதிகள் உள்ளன. இக்கோவில் சிவனது